)
Coolie Ticket Booking: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் துவங்கியுள்ளது. மேலும் உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். சந்தீப் கிஷன், கார்த்தி, விஜய் போன்ற நடிகர்களின் திரைப்படங்களை இயக்கிய இவர், முதன்முறையாக ரஜினியுடன் கைக்கோர்த்திருக்கும் படம்தான் கூலி.
கூலி படத்தில் ரஜினிகாந்தின் பெயர் தேவா. இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இதில் நடிகையும் கமல்ஹாசனின் மகளான இவர், பிரீத்தி என்ற கதாப்பாத்திரத்தில் வருகிறார். அதனுடன் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், சத்யராஜ் உள்ளிட்ட பல பான் இந்திய நடிகர்களும் நடித்திருக்கின்றனர். இப்படி பவர்ஃபுல்லான நடிகர்கள் கூட்டம் இப்படத்தில் இருக்கும் நிலையில், படத்தின் கதையும் அதற்கு ஏற்றார் போல நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்பும் மக்களிடையே தற்போது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கூலி படம், சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலக முழுவதும் வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. மிரட்டலாக அமைக்கப்பட்டிருக்கும் கூலி படம் ரிலீஸுக்கு முன் அட்வான்ஸ் புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் 14 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த புக்கிங்கில் வட அமெரிக்காவில் மட்டுமே ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளதாகவும், இனி வரும் நாட்களிலும் அட்வான்ஸ் புக்கிங் களைகட்டும் என்பது கூறப்படுகிறது.
படம் வெளியாகி இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளில் தொடங்கி அதிரடி புக்கிங்ஸ் நடைப்பெறுகிறது. படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு வட அமெரிக்கா நாட்டில் 50000 மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 10 லட்ச டாலராகும்.
அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை மாலை அதாவது ஆகஸ்ட் 8 ஆம் தேதி துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் மல்டிபிளக்ஸ் அல்லாத திரையரங்கங்களும் பின்னர் பிவிஆர் போன்ற திரைகளுக்கான முன்பதிவும் தொடங்கலாம்.
7 days la, #Coolie varraan solliko#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees @iamSandy_Off… pic.twitter.com/T0tPfxdqmk
— Sun Pictures (@sunpictures) August 7, 2025
#Coolie Kerala Bookings to open on August 8th 10 AM pic.twitter.com/11CMCzZRkD
— Coolie Team (@CoolieTeam) August 3, 2025
இந்நிலையில் முதல் ஆளாக நீங்கள் கூலி படத்தின் டிக்கெட்டை பெற விரும்பினால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை சரிப்பார்க்கவும்.
இந்தியாவின் முன்னணி டிக்கெட் தளங்களான Paytm, BookMyShow மற்றும் District ஆகியவை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் கூலி டிக்கெட்டுகளை வெளியிடும். சில செயலிகள் சுதந்திர தின வார இறுதியில் முன்கூட்டியே வாங்குபவர்களுக்கு தள்ளுபடி விலைகளையும் வழங்கும்.
கூடுதலாக, PVR INOX, Cinepolis, Carnival Cinemas மற்றும் Miraj Cinemas போன்ற மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் திரைப்பட டிக்கெட்டுகளை கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ