)
Record Breaking Ticket Sales: புக் மை ஷோ ஆன்லைன் டிக்கெட் தளத்தில் கடந்த மூன்று நாட்களில் மிகப்பெரிய அளவில் டிக்கெட் விற்பனை சாதனை செய்துள்ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் டிக்கெட் விற்பனை தொடங்கிய கூலி படத்துக்கு, மூன்று நாட்களில் 9,94,000 டிக்கெட்டுகள் விற்று, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் (10 லட்சம்) எட்டியுள்ளன.
நேற்று வார் 2 படத்தின் ப்ரொமோஷன் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடந்தது. வார் 2 ப்ரொமோஷனில் கலந்துக்கொண்டு வீடு திரும்புவதற்காக ரயில்வே ஸ்டேஷன்னில் ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த சமயத்தில் கூலி படத்தின் ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட ட்ரெயின் ரயில்வே நிலையத்தில் என்டர் ஆனதும், அங்கிருந்தவர்கள் வியந்து பார்த்ததும் இல்லாமல் பயங்கர கரகோஷம் எழுப்பியது கூலி படத்தின் மீதான எதிர்ப்பை காட்டியது.
புக் மை ஷோஸ் மூலம் கடந்த மூன்று நாட்களாக கூலி படம் செய்த சாதனையை குறித்து பார்ப்போம். கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டது அதில்,
ஆகஸ்ட் 8 - 376K
ஆகஸ்ட் 9 - 316K
ஆகஸ்ட் 10 - 300K
மொத்தம் BMS இல் 994K டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. மேலூம் தொடர்ந்து கூலி படத்திற்கான டிக்கெட் புக்கிங் செய்யப்பட்டு வருவதால், கிட்டத்தட்ட 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டுக்கள் அதிகமான புக்கிங் செய்யப்படும் எனக் கணிப்பு.
புக் மை ஷோவில் மட்டும் 10 லட்சம் டிக்கெட்டுகள் என்றால், டிஸ்ட்ரிக்ட் ஆப், டிக்கெட் நியூ ஆப் போன்ற சில ஆன்லைன் டிக்கெட் தளம் இருக்கிறது. மறுபுறம் பல திரையரங்குகளில் ஆப்லைன் புக்கிங்கும் ஓபன் செய்யப்பட்டு டிக்கெட் விற்பபை படுஜோராக நடைபெற்று வருகிறது.
கூலி படம் ரிலீஸ் ஆவதற்கு திங்கள், செவ்வாய், புதன் என இன்னும் மூன்று நாட்கள் இருக்கிறது. வரும் வியாழன் (ஆகஸ்ட் 14) தான் ரிலீஸ் ஆகும். எனவே டிக்கெட் புக்கிங்கில் கூலி பல சாதனைகளை படைக்க காத்திருக்கிறது.
கர்நாடகா மாநிலத்தில் பிவிஆர் திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் புக்கின் ஓபன் செய்யப்பட உள்ளதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்காவிலும் இன்று புக்கிங் ஓபன் செய்யப்பட உள்ளது எனத் தகவல்.
திரையரங்குகளில் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் முறைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்ய்யப்படுவதால், இந்த படத்தின் வெளியீடு இன்னும் 3 நாட்களுக்கு இருக்கும் நிலையில், பல சாதனைகள் படைக்க உள்ளது எனபதால், இந்தத் திரைப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் பன்மடங்கு உயர்த்தி உள்ளது.
கூலி படத்தின் முன்பதிவு டிக்கெட் குறித்து வெளியாகும் தகவல்களை வைத்து பார்க்கும் போது, இந்திய சினிமாவில் டிக்கெட் முன்பதிவில் பெரும் சாதனையை படைக்கப்போகிறது என்றே தெரிகிறது.
- வார் 2 படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாதில் வெற்றிகரமாக நடைபெற்றது.
- கூலி படத்தின் ஸ்டிக்கர் மூலம் ரயில் முழுமையாக அலங்கரிக்கப்பட்டது.
- புக் மை ஷோவில் மூன்று நாட்களில் 9,94,000 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்தது.
- ஆகஸ்ட் 8 முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியது, 10 லட்சம் டிக்கெட்டுகளுக்கு மேல் விற்பனை அடைந்தது.
- தமிழகத்தில் சில மாவட்ட மற்றும் புதிய டிக்கெட் விற்பனைக்கான புக்கிங் தொடக்கம்.
- கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் டிக்கெட் விற்பனை விரைவில் நடைபெறும்.
- கூலி படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ