)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் திரையரங்க நிர்வாகமே தியேட்டருக்கு பின்புறம் உள்ள இடத்தில் 190 ரூபாய் டிக்கெட் டிக்கெட்டை 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த படத்தில் சத்தியராஜ், ஸ்ருதி ஹாசன், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
Karangal osarattumey in 3 days! #Coolie#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @Reba_Monica @monishablessyb @hegdepooja @anbariv @girishganges… pic.twitter.com/mHj5xq5kTS
— Sun Pictures (@sunpictures) August 11, 2025
டிக்கெட் விற்பனை!
கூலி படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியது. பல்வேறு திரையரங்குகளிலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் கோவை பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அமைந்துள்ள தங்கம் திரையரங்கில் திரையரங்க நிர்வாகமே டிக்கெட்டை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அம்பலமாகியுள்ளது. திரையரங்கின் அருகே உள்ள காலி இடத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் முகாம் ஒன்றை அமைத்துள்ள திரையரங்க நிர்வாகம் 190 ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டை ஊழியர் மூலம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இன்று அந்த டிக்கெட்டை வாங்க சென்ற ரசிகர் ஒருவர் இது குறித்த காட்சியை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த சூழலில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. குறிப்பாக டிக்கெட் வாங்க வருபவர்கள் பணமாக கொண்டு வந்து டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் டிக்கெட்டை போட்டோ வீடியோ எடுக்க கூடாது என்றும் திரையரங்க ஊழியர் கூறுவதும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு திரைப்படமானாலும் வரையறுக்கப்பட்ட விலைக்கு மேல் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யக்கூடாது என விதிமுறை உள்ள நிலையில் கூலி திரைப்படத்தின் டிக்கெட் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிக விலை?
பொள்ளாச்சி மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் கூலி படத்தின் டிக்கெட் விலை அதிக அளவில் இருப்பதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டின் விலை 3000 முதல் 4000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 9 மணி காட்சிக்கு கூடுதல் விலையில் டிக்கெட்டில் விற்பனை செய்யப்படுவதால், ரசிகர்கள் ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். மேலும் அங்கு தமிழகத்தை விட சில மணி நேரங்களுக்கு முன்பே ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் அங்கு படை எடுத்து வருகின்றனர். பல திரையரங்குகளில் முதல் காட்சிக்கான டிக்கெட் ஆன்லைனில் விற்பனை செய்யப்படாமல், கவுண்டர் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ