சூப்பர் ஹிட் ஆன ‘சங்கராந்திகி வஸ்துனம்’ ஓடிடி ரிலீஸ்! எந்த தளம் தெரியுமா?

Sankranthiki Vasthunam OTT Release : பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்”  திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது!  

Written by - Yuvashree | Last Updated : Mar 2, 2025, 06:44 PM IST
  • சூப்பர் ஹிட் ஆன சங்கராந்திகி வஸ்துனம் திரைப்படம்
  • வெங்கடேஷ் நடித்தது..
  • எந்த தளத்தில் வெளியாகிறது?
சூப்பர் ஹிட் ஆன ‘சங்கராந்திகி வஸ்துனம்’ ஓடிடி ரிலீஸ்! எந்த தளம் தெரியுமா?

Sankranthiki Vasthunam OTT Release : ~ “சங்கராந்திகி வஸ்துனம்” அனில் ரவிபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில்,  முன்னணி நட்சத்திர நடிகர் வெங்கடேஷ் ட‌குபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி, மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் ~

Add Zee News as a Preferred Source

இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை குவித்த பிறகு ZEE5 இல் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம்  உட்பட ஐந்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன்  ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. அதே நேரத்தில், ZEE தெலுங்கு  தொலைக்காட்சியில் மார்ச் 1, 2025 அன்று மாலை 6 மணிக்கு முதன்முதலில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்பட்டது.

ஜீ 5 மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் இந்த வருடத்தின் மிகப்பெரும் திரைப்படமான “சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஓடிடி ஸ்ட்ரீமிங் மார்ச் 1, 2025 அன்று மாலை 6க்கு ஒளிபரப்பானது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது, அற்புதமான காமெடி, பழைய நினைவுகள்,  ஞாபகங்கள் மற்றும் குடும்ப உறவுகளை கொண்டாடும் அருமையான கதை ஆகியவற்றிற்காக பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  இயக்குநர் அனில் ரவிபுடியின் இயக்கத்தில், வெங்கடேஷ் டகுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்திரி மற்றும் உபெந்திரா லிமாயே ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்கள் பெற்றது.

இந்தத் திரைப்படம் ஒரு குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை  அழுத்தமான காமெடியுடன்  பரபரப்பான ரோலர் கோஸ்டராக சொல்லியது.  “YD ராஜு” என்ற ஓய்வு பெற்ற காவலர் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் டகுபதி, “பாக்யலக்ஷ்மி” (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் அவரது முந்தைய காதலியாக “மீனாட்சி” (மீனாட்சி சௌத்திரி) கதையின் மைய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். ஒரு பிரபல பிஸினஸ்மேன் கடத்தப்படுகிறான், இதனால் ராஜு மீண்டும் தனது கடந்தகால ஆக்சன் அவதாரத்தில் இறங்கி,  அந்த பிரச்சனையை எப்படி தீர்க்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை. குடும்பம், காதல், காமெடி அனைத்தும்  சரிவிகிதத்தில் கலந்து பரபரப்பான திரைக்கதையுடன் அருமையான என்டர்டெயினராக இப்படம் உருவாகியிருந்தது. 

“சங்கராந்திகி வஸ்துனம்” திரைப்படத்தின் இயக்குநர் அனில் ரவிபுடி கூறுகையில்..“இந்தப் படத்தை ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி, அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது, மிகுந்த உற்சாகம் தருகிறது. இந்த படம் ஒரு முழுமையான காமெடி ரோலர்கோஸ்டர் அனுபவத்தை வழங்கும்.  மிகச் சிறந்த நடிகர்களின் நடிப்பில் இது அருமையான என்டர்டெயினராக இருக்கும்.  திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடப்பட்டதைப் போலவே, இந்த டிஜிட்டல் வெளியீட்டிலும் மக்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

வெங்கடேஷ் டகுபதி கூறுகையில்.., “இந்தப் படத்தில் ‘ராஜு’ பாத்திரத்தை செய்தது மிக அற்புதமான  அனுபவமாக இருந்தது.  குடும்ப சிக்கல்களுக்குள் மாட்டிக்கொண்டு முழிக்கும் நாயகனின் கதை, காதல், காமெடி என பரபரவென பல திருப்பங்களை கொண்டிருந்ததது.  இந்த கதாப்பாத்திரத்தை திரையில் கொண்டு வந்தது மிக இனிமையான அனுபவம்.  ZEE5 மற்றும் ZEE தெலுங்கு தொலைக்காட்சி வெளியீட்டின் மூலம், அனைத்து மக்களும் இப்படத்தை பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி.”

மேலும் படிக்க | சுழல் சீசன் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!! எந்த தளத்தில், எப்போது வெளியாகிறது தெரியுமா?

மேலும் படிக்க | குடும்பஸ்தன் ஓடிடி ரிலீஸ்!! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News