)
Deepika Padukone Joins AA26 Movie: தமிழ் திரையுலகில் டாப் இயக்குநராக இருப்பவர், அட்லீ. ஜவான் படம் மூலம் பாலிவுட் திரையுலகிற்குள் நுழைந்த இவர், தற்போது அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கயுள்ளார். தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க போவது யார் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன்:
தமிழ் திரையுலகில் வெகு சில படங்களையே இயக்கி இருந்தாலும், வெகு விரைவில் டாப் இயக்குநராக மாறியவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தமிழில் இயக்கியதே 4 படம்தான். அதிலும் மூன்று படத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க அடுத்ததாக ஷாருக்கானிற்கு குறி வைத்தார். அட்லீயை பாலிவுட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தது, ஜவான் திரைப்படம். இப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது டோலிவுட்டில் நுழைய திட்டமிட்ட அட்லீ அல்லு அர்ஜுன் வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அல்லு அர்ஜுன் (Allu Arjun) ஹீரோவாக நடிக்கிறார். இது அல்லு அர்ஜுனின் 22வது படமும், அட்லீயின் (Atlee) 6வது படமாகும். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்கவுள்ளனர். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இது தொடர்பான பிரம்மாண்ட அறிவிப்பு வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டது.
இவர்தான் ஹீரோயினா?
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து தனித்துவமான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார்.
சர்வதேச திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் #AA22xA6 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, இந்திய திரையுலகில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிர்வை ஏற்படுத்தியது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
The Queen marches to conquer!
— Sun Pictures (@sunpictures) June 7, 2025
Welcome onboard @deepikapadukone#TheFacesOfAA22xA6
https://t.co/LefIldi0M5#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/85l7K31J8z
'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுனின் காந்தம் போல் இழுக்கும் திரை தோற்றம் - பிரம்மாண்டத்தின் சர்வதேச அடையாளமாகத் திகழும் இயக்குநர் அட்லீ மற்றும் வெற்றிகளை தொடர்ச்சியாக வழங்கி, தனித்துவமான தயாரிப்பு நிறுவனம் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் சன் பிக்சர்ஸ் - இவர்களுடன் திறமையான நடிப்பாலும், வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களை வசப்படுத்தியிருக்கும் தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். இதனால் இந்த படம் சர்வதேச அளவிலான திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்தப் படத்தில் ஏற்கனவே சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். படக் குழுவினர் வெளியிட்டிருக்கும் இந்த புது தகவலால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இனி தொடர்ந்து வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருப்பதால்.. ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க தொடங்கி இருக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ