மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம், மாமன்னன். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, நகைச்சுவை நடிகர் வடிவேலு இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனுஷ் விமர்சனம்...


‘கேப்டன் மில்லர்’ நாயகன் தனுஷ், தற்போது பல படங்களை தன் கைவசம் வைத்துக்கொண்டு ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். தனது பிசியான வாழ்க்கைக்கு இடையிலும், இவர் மாமன்னன் படத்தை பார்த்துள்ளார். அது மட்டுமன்றி படம் குறித்து பாசிடிவான விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார். 



தனுஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: “மாரி செல்வராஜ் உணர்வுகளை கடத்தக்கூடிவர். வடிவேலு மற்றும் உதயநிதி அவரவர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளனர். கீர்த்தி, ஃபகத் ஃபாசில் தங்களது கதாப்பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இடைவேளை காட்சியில் திரையரங்கே அதிரப்போகிறது. ஏ.ஆர் ரஹ்மானின் இசை அற்புதம்..” 


மேலும் படிக்க | “நான் ரெடி” பாடலில் மாற்றம் செய்த படக்குழு..! எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த முடிவா..?


கமலின் விமர்சனம்:


சில வாரங்களுக்கு முன்பு நடைப்பெற்ற மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் ஹாசன் கலந்து கொண்டார். அப்போது, தான் படத்தை பார்த்துவிட்டதாகவும், மாரி செல்வராஜ்ஜின் இயக்கத்தை பாரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தற்போது நடிகர் தனுஷ்ஷும் படம் குறித்து பாசிடிவான விமர்சனத்தை கூறிய நிலையில், மாமன்னன் படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. 


நாளை பட ரிலீஸ்:


பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் படம், நாளை வெளியாகிறது. சில தினங்களூக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்தது. ட்ரைலரில் இடம் பெற்றிருந்த வசங்கள் மற்றும் காட்சிகலை வைத்து பார்க்கையில், படம் கண்டிப்பாக கனமான கதையம்சத்தை கொண்டதாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.


சர்ச்சையில் மாமன்னன் இயக்குநர்..


இயக்குநர் மாரி செல்வராஜ், சமீபத்தில் தான் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் ‘தேவர் மகன்’ படம் குறித்து பேசினார். அப்போது அவர், அப்படம் தனக்கு நிறைய தாக்கத்தினை ஏற்படுத்தியதாகவும், இந்த படம்தான் தன்னை மாமன்னன் படத்தை எடுக்க தூண்டியதாகவும் கூறினார். இது, பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், தென் தமிழக மாவட்டங்களில் இருக்கும் சில சாதிய சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என வீடியோக்களை வெளியிட்டனர். சிலர், இப்படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் இருக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இத்தனை பிரச்சனைகளை கடந்து, மாமன்னன் படம் நாளை வெளியாகவுள்ளது. 


உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம்..


நடிகராக மட்டுமன்றி தமிழக அமைச்சராகவும் நடமாடும் உதயநிதிக்கு இது கடைசி படமாகும். இந்த படத்திற்கு பிறகு, 3-4 வருடங்களுக்கு படம் நடிக்கப்போவதில்லை என அவர் கூறியுள்ளார். காமெடி-காதல் நிறைந்த ‘ஓகே ஓகே’படம் மூலம் தனது திரைவாழ்க்கையை ஆரம்பித்த உதயநிதி தற்போது கனத்த கதையுள்ள படமான ‘மாமன்னன்’ மூலம் தன் படத்தை முடிக்கிறார். 


கீர்த்தி அரசியல் எண்ட்ரி?


தென்னிந்திய நடிகைகளுள் பிரபலமான நடிகையான கீர்த்தி சுரேஷ், விரைவில் அரசியலில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நட்பு பாராட்டுவதால் இவர் திமுக கட்சியில் முக்கிய உருப்பினராக இணையலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | Bigg Boss Season 7: பிக் பாஸ் சீசன் 7 விரைவில் ஆரம்பம்? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அப்டேட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ