)
Idli Kadai Vs Kantara Chapter 1 : அக்டோபர் மாத விடுமுறை தினங்களை குறி வைத்து, முக்கியமான படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் ஒன்று, தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான இட்லி கடை. இந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து ராஜ் கிரண், நித்யா மேனன், ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காந்தாரா சேப்டர் 2 படம், ரிஷப் ஷெட்டியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் மாறி மாறி விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றனர்.
இட்லி கடை :
தனது சிறுவயதில், தான் பார்த்த கதாப்பாத்திரங்களை அடிப்படையாக வைத்து ‘இட்லி கடை’ படத்தின் கதையை எழுதி இயக்கியதாக, தனுஷ் தெரிவித்தார். இந்த படத்தில் தனுஷ், முருகன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு வில்லனாக அருண் விஜய் நடித்திருக்கிறார். நகரத்தில் இருக்கும் பெரிய வேலையை விட்டுவிட்டு, கிராமத்தில் தனது தந்தை வைத்திருந்த இட்லி கடையை பார்த்துக்கொள்வதற்காக ஹீரோ மீண்டும் தன் சொந்த ஊருக்கு வருகிறான். அங்கிருந்து கதை ஆரம்பித்து, ஊர் செண்டிமெண்ட், வில்லன்களுடன் சண்டை-ஆக்ஷன் என்று கதை பயணிக்கிறது.
காந்தாரா சேப்டர் 1:
காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் முன் கதையாக உருவாகி இருக்கிறது, காந்தாரா சேப்டர் 2. இந்த படத்தை ரிஷப் ஷெட்டியே எழுதி இயக்கியிருக்கிறார். காந்தாரா படத்தில் சொல்லப்பட்ட ராஜாவின் கதையாக, அதன் முன்கதை இருக்கிறது. இந்த படத்தின் தொடர் கதைகள் அடுத்தடுத்து படங்களாக வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களீல் நடித்துள்ளனர்.
எது நல்லாயிருக்கு?
இரண்டுக்கும் பாசிடிவான விமர்சனங்கள்
COINCIDENCE !!
— Filmy Fanatic (@FanaticFilmy) October 2, 2025
- #Dhanush acted & Directed #IdliKadai
- #RishabhShetty acted & Directed #KantaraChapter1
Both the movies are opened with a Positive Response.. pic.twitter.com/wPjhD59UIw
தனுஷ் இயக்கி நடித்த படம் இட்லி கடை, அதே போல ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம், காந்தாரா 2. இரண்டுமே பாசிடிவான விமர்சனங்களை பெற்று வருவதாக ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
அருமை..
இட்லி கடை படத்தில் என்னவெல்லாம் பாசிடிவாக இருக்கிறது என்பதை ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
Young Look Foreign look Village Look
— PRATHEESH P (@KettavaN6474) October 2, 2025
Characterization
Connection sequences
Dream Scene
Kannu kutty & Transformation Portion
Amma Idlikadai Visiting Emotional Scene
Enjaami thanthane Visuals
Boxing Portion
Agimsai
பெரியவர்#IdliKadai #IdliKadaiReview pic.twitter.com/7kvkhZZK0i
இப்படத்திற்கு ப்ளாக் பஸ்டர் ரெஸ்பான்ஸ் வந்திருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
காந்தாராவிற்கு என்ன விமர்சனம்?
காந்தாரா 1 திரைப்படத்தின் இடைவேளைக்கு முன்பான 20 நிமிட காட்சிகள் மாஸாக இருப்பதாக ஒருவர் ரிவ்யூ கொடுத்துள்ளார்.
Good first half with a solid 20 minute pre interval block - #KantaraChapter
— Sathwik Sriram (@sksathwik) October 2, 2025
பவர்ஃபுல்!
காந்தாரா சேப்டர் 1 படத்தின் ரிவ்யூ கொடுத்துள்ள ஒருவர், முதல் பாதி டீசண்டாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மாஸாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
#KantaraChapter1 Review (3.5/5) Decent 1st Half & Excellent 2nd Half. @shetty_rishab Delivers An Powerful Performance @AJANEESHB BGM
— Michael Vijay (@Realcinemakaran) October 2, 2025
Last 30 Minutes Are Pure Goosebumps
Overall : Don’t Miss It On The Big Screen.
அதே போல, ரிஷப் ஷெட்டி பவர்ஃபுல்லான பர்ஃபாமன்ஸில் மாஸ் காட்டுவதாகவும் கூறியிருக்கிறார். கடைசி 30 நிமிடங்கள் புல்லரிக்க வைப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இரண்டில் எது ஓகே?
இட்லி கடை தமிழ் படம் என்பதால், அதை தமிழ்நாட்டில் அதிகம் பேர் பார்க்க விரும்புகின்றனர். காந்தாரா, கன்னட படம் என்றாலும் அதன் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அதற்கும் தமிழ்நாட்டில் நல்ல ரெஸ்பான்ஸ் உள்ளது. எனவே, இரண்டுமே தியேட்டர் மெட்டீரியல் எனும் பேச்சு எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ