)
Actor Dhanush: நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை தனுஷ் முதன்முதலில் சந்தித்தது காதல் கொண்டேன் படத்தின்போதுதான். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், இருவரும் திருமணம் செய்துக்கொண்டார்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை தனுஷ் திருமணம் செய்துக்கொண்ட பின்னர் தனுஷுக்கு மேலும் மவுசு கூடியது. சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற மதிப்பு அவருக்கு கிடைத்தது. பின்னர் சினிமாவிலும் மெளமெள ஜொலிக்க தொடங்கினார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தின் 3 படத்தில் நடித்தார் தனுஷ். இப்படம் அவரின் கரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்த நிலையில், சுமுகமாக சென்றுக்கொண்டிருந்த தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வாழ்க்கையில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
மிருணாள் தாகூருடன் டேட்டிங்?
Dhanush Mrunal Dating: பிரச்சனை பெரிதாகி நீதிமன்றம் வரை சென்றது. இருவரும் கடந்த ஆண்டு விவாகரத்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தனுஷ் குறித்து ஒரு தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதாவது, அவர் பிரபல நடிகை மிருணாள் தாகூருடன் டேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மிருணால் தாகூர் நடித்த தற்போது சன் ஆஃப் சர்தார் 2 படம் வெளியாகி இருக்கிறது. இப்படம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
வைரலாகும் தனுஷ் பேட்டி
இந்த நிலையில், முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து தனுஷ் ஒரு ஆங்கிய ஊடகம் ஒன்றில் பேசி இருப்பது ட்ரெண்டாகி வருகிறது. அந்த பேட்டியில், ரஜினிகாந்த் மகள் என்பதற்காக ஐஸ்வர்யாவை நான் காதலிக்கவில்லை. அவரை நான் அப்படி பார்க்கவில்லை. அவர் மிகவும் எளிமையானவர். அவரது தந்தை ரஜினிகாந்த்தும் அப்படிதான். ஆனால் அவரை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 100 மடங்கு எளிமையானவர் என ஐஸ்வர்யா குறித்து தனுஷ் கூறி இருந்தார். இந்த பேட்டி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ