Dhanush Kubera X Review Tamil : தமிழில் மட்டுமன்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்த வருகிறார் தனுஷ். அப்படி, அவர் சமீபத்தில் நடித்திருக்கும் தமிழ்-தெலுங்கு படம், குபேரா. இதனை சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள், தற்போது இணையத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.
குபேரா திரைப்படம்:
தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கும் குபேரா படத்தில், அவருக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, தலிப் தாஹில், ஜிம் சார்ப் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படம், பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து முடிக்கப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
தனுஷ் இந்த படத்தில் பிச்சைக்காரராக நடித்திருக்கிறார், நாகார்ஜுனா தீபக் என்கிற கதாப்பாத்திரத்தில் காேடீஸ்வர தொழிலதிபராக நடித்திருக்கிறார். இவரின் சூழ்ச்சி வலையில் சிக்கும் பிச்சைக்காரரின் வாழ்வை வைத்துதான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
X தள விமர்சனம்:
வழக்கமாக, எந்த படம் வெளியானாலும் அந்த படத்தை முன்கூட்டியே பார்ப்பவர்கள், முன்கூட்டியே எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை வெளியிடுவது சகஜம். அப்படி, குபேரா திரைப்படத்தை பார்த்த சிலரும் எக்ஸ் தளங்களில் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
குபேரா படத்தை பார்த்த ஒருவர், முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார். இடைவேளை காட்சி மிகவும் சர்ப்ரைஸாக இருந்ததாகவும், திரைக்கதையை பொருத்தவரை எந்த குறையும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
#Kuberaa Pretty Good First half.
Surprised to see the interval episode from Sekhar Kammula. The rest is smooth, writing has no complaints.
Everything is clearly and neatly done. @ThisIsDSP BGM
Cinematography and production values are top notch. #Kubera— Quirk47 (@Chay_47) June 20, 2025
மேலும், காட்சி அமைப்புகளும், ஒளிப்பதிவும் நன்றாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
கத்தரிப்புக்கு விமர்சனம்..
குபேரா படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், சேகர் கம்முலா டீசண்டான ஒரு க்ரைம் டிராமாவை எழுதியிருப்பதாக கூறியிருக்கிறார். ஆனால், படம் என்ன சொல்ல வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்.
Sekhar kammula decently written crime drama works in most parts but misses the actual mark.
Leads performance wise best , editing is the biggest culprit. Could've trimmed 30mins atleast #Kubera #Dhanush #Nagarjuna pic.twitter.com/BcPrvucDUN— Rebel (@RebelliousFront) June 20, 2025
நடிகர்கள் நன்றாக பர்ஃபார்ம் செய்திருப்பதாக கூறும் அவர், இன்னும் கொஞ்சம் படத்தை கத்தரித்திருக்கலாம் என்று கூறுகிறார். மேலும், 30 நிமிடங்கள் காட்சிகளை கத்தரித்திருக்கலாம் என்று பேசியிருக்கிறார்.
குபேரா படத்தின் முதல் பாதியை ஒரு ரசிகர் கொஞ்சம் நீளமாக இருப்பதாக விமர்சித்திருக்கிறார். பெரிய மாஸான காட்சிகள் எதுவும் திரைப்படத்தில் முதல் காட்சியில் இல்லை எனவும், ஆனால் திரைக்கதை ரசிகர்களுக்கு எங்கேஜிங் ஆக இருப்பதாகவும் கூறினார்.
#Kubera 1st half : Konjam Lengthy without mass scenes n twists but Shekar 's screenplay is engaging Good 1 line. Story picks up after D intro. Little lag. #Dhanush is show stealer Nagarjuna, DSP, Rashmika good All set for 2nd half with a okayish interval. pic.twitter.com/wF2UfYTHWF
— Parthaaaaaa (@DeiParthaaaaaa) June 20, 2025
தனுஷின் கதை தேர்வு நன்றாக இருப்பதாகவும், இடைவேளை காட்சி ஓகே-வாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
தனுஷுடைய நடிப்பு மட்டும்தான் படத்தில் சிறந்ததாக இருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார். 5க்கு 3 மார்க் படத்திற்கு கொடுக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Again performance of dhanush only taken film... simple flat 1st half...and followed by good second half #kubera
Decent watch 3 out of 5
Don't trust some reviewers they just hyping all only performance of dhanush only very good .. writing good second half... Good role for NA https://t.co/7jaiMVABWX— KTown (@prethive_faro) June 20, 2025
திரைக்கதை நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி நன்றாக இருப்பதாகவும் அந்த ரசிகர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஜூன் to நவம்பரில் வெளியாகும் மாஸ் தமிழ் படங்கள்! அதிரடி லிஸ்ட் இதோ
மேலும் படிக்க | இது தனுஷ்க்கு வித்தியாசமான படம் DSP ஸ்பீச்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ