)
Did Aamir Khan Really Trash Coolie? சமீபத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம், கூலி. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், கேமியோ கதாபாத்திரத்தில் வந்திருந்தார். இதில் அவர் கேமியோ எதற்கு என்று கேள்வி, படம் பார்த்தவர்களுக்கு இருந்தது. தற்போது அதே போலத்தான், அமீர்கானும் ஒரு விஷயத்தை பேசியிருக்கிறார். ஆனால், இது உண்மையா என்கிற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
அமீர்கான் பேச்சு:
நடிகர் அமீர்கான், கூலி படத்தில் நடித்தது குறித்து பேசியதாக ஒரு செய்தித்தாள் கட்டிங் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அவர் “நான் கூலி படத்தில் நடித்தது மிகப்பெரிய தவறு” என்று கூறியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
"நான் ரஜினி சாருக்காக தான், அந்த ரோல் பண்ணேன். ஆனா, படத்துல என் கேரக்டர் என்ன பண்ணுச்சுன்னு சத்தியமா எனக்கே தெரியல.
சும்மா நடந்து வந்து, 2 டயலாக் பேசிட்டு காணாம போன மாதிரி இருந்தது. அந்த கேரக்டருக்கு எந்த purposeம் இல்ல, மோசமா எழுதப்பட்டிருந்தது.
நான் கூலி படத்துல creativeஆ involve ஆகாததால, அந்த சீனோட output எப்படி வரும்ன்னு எனக்கு தெரியல. ஜாலியான ஒரு cameoஆ இருக்கும்ன்னு நெனச்சேன், ஆனா அது அப்படி இருக்கல.
இந்த படத்துல நடிச்சது பெரிய mistake தான். இனிமே அடுத்தடுத்த படங்கள்ல அதிகம் கவனமா இருப்பேன்” என்று அவர் கூறியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அமீர்கான் இதை கூறினாரா?
அமீர்கான் இப்படி கூறியதாக வலம் வரும் இந்த செய்தியை, உறுதிப்படுத்தும் எந்த சான்றுகளும் வெளியாகவில்லை. வீடியோ, போட்டோ என இதற்கான எந்த ஆதாரங்களுமே இல்லை. இதை சரிபார்க்கும் முன்னரே பல செய்தி சேனல்கள் இது குறித்து பதிவிட ஆரம்பித்து விட்டன. எனவே, இது இப்போது அமீர்கான் சொன்னது போல ஆகிவிட்டது.
படம் ட்ராப்?
கூலி படத்தை அடுத்து, லோகேஷ் கனகராஜ் அமீர்கானை வைத்து ஒரு சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருந்தார். இதில், அமீர்கான் ஹீரோவாக நடிக்க இருந்தார். கூலி படம், கடும் விமர்சனங்களுக்கு ஆளான பின், இந்த படத்திலிருந்து அமீர்கான் விலகியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படம், தற்போது ட்ராப் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கூலி படத்தில் அமீர்கான் குறித்த விமர்சனம்..
கூலி திரைப்படத்தில், அமீர்கான் ‘தாஹா’ எனும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்தை பற்றி, படம் முழுக்க பேசிக்கொண்டே இருப்பர். கடைசி 10 நிமிடங்களில்தான் அமீர்கான் வருவார். கைகளில் 4 ஹஸ்கி நாய்களை பிடித்துக்கொண்டும், அரை டவுசர் போட்டுக்கொண்டும் இவர் வருவதை பார்த்து, “ஏதோ பயங்கரமா பண்ண போறாரு போல..” என்று பலரும் நினைத்தனர். ஆனால், கடைசியில் ரஜினியை பார்த்ததும், “எப்படி இருக்கீங்க அண்ணா..” என கேட்டு டம்மி டப்பாசாக மாறி விட்டார். இது, ரசிகர்களை பெரும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது.
லோகேஷ் கனகராஜும் ஒரு நேர்காணலில், “அமீர்கான் கேமியோ 10 நிமிடம் என்றாலும், அவரது பிரசன்ஸ் படம் முழுக்க ஃபீல் ஆகும்” என்றார். இறுதியில் அதுவும் ஆகவில்லை. எனவே, அமீர்கானை சரியாக உபயோகிக்க தெரியாத லோகேஷ் கனரகாஜ் மீது ரசிகர்கள் பலர் கொடூர கடுப்பில் இருக்கின்றனர்.