)
Did Madhampatty Rangaraj Left His Second Wife Joy : கடந்த சில வாரங்களாகவே, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பிரபலம், மாதம்பட்டி ரங்கராஜ். இவர், ஏற்கனவே திருமணமாகி இருக்கும் வேளையில், இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதுதான் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், அவர் தனது 2வது மனைவியை கழட்டி விட்டு விட்டாரா என்கிற கேள்வி, தற்போது எழுந்துள்ளது. அதற்கு காரணம், அவர் சமீபத்தில் போட்டிருந்த புகைப்படம்தான்.
மெகந்தி சர்கஸ், பென்குயின் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், பெரிய சமையல்கலை நிபுணர்களுள் ஒருவர். செலிபிரிட்டி வீட்டு விசேஷங்களுக்கு இவர்தான் உணவு சப்ளை செய்வார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது மற்றும் 6வது சீசனின் நடுவராகவும் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்கிற ஆடை வடிவமைப்பாளர் ஒரு பதிவை வெளியிட்டார்.
மாதம்பட்டி ரங்கராஜிற்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை பதிவிட்ட அவர், 6 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது, இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. ஆனால், இது குறித்து மாதம்பட்டி ரங்கராஜோ அவருடைய முதல் மனைவி ஸ்ருதியோ வாய் திறக்கவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ், தனது 2வது திருமணம் குறித்த போட்டோக்கள் வெளியான பின்பு, தனது கமெண்ட் செக்ஷன் அனைத்தையும் ஆஃப் செய்து விட்டார். இருப்பினும், தனக்கும் ஜாய் கிரிஸில்டாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல அவரை இன்ஸ்டாவில் இருந்து அன்பாலோ செய்திருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு வரை, ஜாய்தான் மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்தார். ஆனால், சமீபத்தில் ரங்கராஜ் பகிர்ந்திருந்த போஸ்டில், ஸ்டைலிஸ்ட் என வேறு ஒருவரை டேக் செய்திருக்கிறார்.
இதுவரை மாதம்பட்டி ரங்கராஜின் ஆடையை ஜாய் வடிவமைத்து வர, இவர்களின் திருமண விஷயம் வெளியில் தெரிந்த பின்பு மட்டும் ஏன் வேறு இன்னொருவர் அந்த இடத்திற்கு வந்தார் என்கிற கேள்வி ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளது. இதனால், “ஒரு வேளை மாதம்பட்டி ரங்கராஜ் தனது 2வது மனைவியை கழற்றி விட்டு விட்டாரோ?” என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

உடனே ஜாய் போட்ட பதிவு..
மாதம்பட்டி ரங்கராஜ் மேற்கூறிய பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில், ஜாய் கிரிஸில்டாவும் இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரியை வெளியிட்டார். தனது புகைப்படத்துடன் அவர் “நீங்கள் கொடுத்த அன்பையும் கவனிப்பையும் நாங்கள் திரும்ப தருகிறோம். ஒன்றாக இருந்தால் நாம் முழுமையடைவோம்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதில் அவர் அவரது பிறக்கப்போகும் குழந்தையையும், அவரையும் பற்றி கூறுவதாக கூறப்படுகிறது.
ஏன் இன்னும் விவாகரத்து வாங்கவில்லை?
மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், ஒரு வழக்கறிஞர். திராவிட சிந்தனைகள் கொண்ட இவர், சமூக நல ஆர்வலராகவும் இருக்கிறார். இந்த சமயத்தில், தனது கணவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிந்தும், அவர் எப்படி இன்னும் விவாகரத்து கோராமல் இருக்கிறார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டதும் பெரும் பேசுபொருளானது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ