Did You Know Famous Actor Abused Aishwarya Rai : எத்தனை உலக அழகிகள் வந்தாலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு கொடுக்கத் தெரிந்த ஒரே உலக அழகியாக விளங்குபவர் ஐஸ்வர்யா ராய். இவர் இப்போது திருமணமாகி குழந்தையுடன் செட்டில் ஆகி இருந்தாலும் இவரது, முன்னாள் காதலன் ஒருவர் இவரை அடித்து துன்புறுத்துவதாக ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய்யின் முன்னாள் காதலர்:
திரையுலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் ஒன்றாக சேர்ந்து வேலை பார்க்கும் போது, அவர்களுக்குள் காதல் மலர்வது சகஜம். இதில் ஒரு சில காதல்கள் கை சேரலாம், பல காதல்கள் பாதி வழியிலேயே நின்றுவிடலாம். அப்படி பாதியிலேயே விட்டுப் போன காதல் சல்மான் கான்-ஐஸ்வர்யாவினுடையது. இவர்கள் இருவரும் ஒரு பாலிவுட் படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
1999-2002 காலகட்டத்தில் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். பாலிவுட்டின் க்யூட்டான காதல் ஜோடிகளை ஒருவராக இவர்கள் வலம் வரத்தொடங்கினர். இவர்கள் இருவரும் வெகுவிரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராதமாக இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.
அடித்து துன்புறுத்தல்…
நடிகர் சல்மான் கான் உடனான உறவிலிருந்து விலக்கிய பிறகு ஐஸ்வர்யா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில் அவரது பிரேக்கப் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இது குறித்து பேசி அவர் சல்மான் கான் தன்னை பலமுறை உடல்ரீதியாக தாக்கியதாகவும், அதிர்ஷ்டவசமாக தனக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார். காயம் ஏதும் வெளியில் தெரியவில்லை என்பதனால், வெளியிலும் யாரும் இது குறித்து கண்டுபிடிக்கவில்லையாம். இப்படி ஐஸ்வர்யா ராய் பெயர் பேசியதை தொடர்ந்து இது அந்த காலத்தில் சர்ச்சையாக வெடித்தது.

ஐஸ்வர்யாவின் கடைசி காதல்…
நடிகை ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனுடன் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார். அப்படி நடிக்கையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்கள் அதன் பிறகு காதலர்களாக மாறினர். சில காலங்கள் டேட்டிங் செய்துவிட்டு அதன் பிறகு இருவரும் தங்களின் இரு வீட்டாரிடமும் காதல் குறித்து கூறினார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த பிறகு, அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இப்போது வரை இதுவே ஐஸ்வர்யா ராயின் கடைசி காதலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விவாகரத்தா?
ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பிரச்சனையுடன் மகிழ்ச்சியான திருமண உறவில் இருப்பதாக பலரும் நினைத்து வந்தனர். ஆனால் சமீபத்தில் நடந்த சில விஷயங்கள் அதை வேறாக காண்பிக்கிறது. ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆர்யாத்யாவுடன் தனியாக வந்து சென்றது, ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பிரச்சனை குடும்பம் கண்டுகொள்ளாமல் நின்றது, உள்ளிட்ட விஷயங்கள் விவாகரத்து குறித்த சர்ச்சையை கிளப்பியது. அபிஷேக் பச்சன் வேறு ஒரு நடிகையுடன் உறவில் இருப்பதாகவும் இதனால் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் திருமண விவாகரத்து குறித்த எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஐஷ்வர்யா ராய் பற்றி தெரியாத சில உண்மை தகவல்கள் !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









