Mysskin Criticized Super Singer 11 Contestant : தமிழ் திரையுலகில் சில படங்களிலேயே இயக்கியிருந்தாலும், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற இயக்குனராக இருக்கிறார் மிஷ்கின். நடிப்பையும் இயக்கத்தையும் தாண்டி, இவர் பாடகராகவும் இருக்கிறார். இதையடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மிஷ்கின்..
தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருக்கும் டிவி ஷோக்களில் ஒன்று, சூப்பர் சிங்கர். இதன், 11வது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வழக்கப்படி, ஒவ்வொரு நடுவிருக்கும் ஒவ்வொரு டீம் கொடுக்கப்பட்டு, அதில் போட்டியாளர்கள் பங்கேற்பார்கள். அப்படி மிஷினுக்கும் தனியாக ஒரு குழு கொடுக்கப்பட்டுள்ளது.
மிஷினுடன் சேர்ந்து, இந்த சீசனில் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், தமன் உள்ளிட்டோர் நடுவர்களாக இருக்கின்றனர்.
போட்டியாளரை திட்டிய மிஷ்கின்..
சில நாட்களுக்கு முன் நடந்த எபிசோடில், மிஷ்கின் ஒரு போட்டியாளரை விமர்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் டீமில் மொத்தம் ஐந்து பேர் இருக்கின்றனர். அதில் சரண் ராஜா என்கிற போட்டியாளரும் முக்கியமான ஒருவர்.
இந்த வார எபிசோடில், சரண் ராஜாவும் திசாத்தானா இருவரும் சேர்ந்து பாடும் செக்மென்ட் நடந்தது. சரண் ராஜா பாடி முடித்ததும், கமெண்ட் சொன்ன மிஷ்கின், “நீ சரியாகவே பாடவில்லை..” என்று கண்டித்தார்.
“காதல் உணர்ச்சியோடு பாட வேண்டிய பாடல், இழவு வீட்டில் பாடுவது போல் பாடுகிறாய். நிறைய இடங்களில் மிஸ் பண்ணிட்ட. இந்த பாடலை படித்துக் கொண்டே கூட பாடி விடலாம். நீ என் டீம்தான், ஆனால் இதை விமர்சித்துதான் ஆக வேண்டும். இது ரொம்ப bad performance” என்று கூறினார். மேலும், “இப்போ என்ன பண்ணனும்? லைட்ட அமுக்கனுமா? அடிச்சே பாேட்ருவேன்” என்று கூறினார். தற்போது இவர் இப்படி பேசியது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிஷ்கின் இப்போது என்ன செய்கிறார்?
இயக்குநர் மிஷ்கின், பல படங்களில் நடித்தும் வருகிறார். கடைசியாக அவரது சைக்கோ படம் வெளியானது. பிறக் அறிவிக்கப்பட்ட பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. விஜய் சேதுபதியை வைத்து, ட்ரெயின் படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடந்து வருகிறார்.
மேலும் படிக்க | “விஜய் கடுமையான உழைப்பாளி, என் தம்பி மாதிரி”-மிஷ்கின் சொன்ன விஷயம்!
மேலும் படிக்க | சிறுவயதில் ஆபாச புத்தகம் படித்து..அம்மாவிடம் சிக்கிய இயக்குநர்! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









