தீராமல் நீளும் ஜனநாயகன் பட பிரச்சனை..ஹெச்.வினாேத் சொன்ன பதில்! பிரபலம் பகிர்ந்த விஷயம்..

H Vinoth Jana Nayagan Issue Era Saravanan : ஜனநாயகன் பட விவாகரம் தீராமல் நீள்வதை ஒட்டி, பிரபல இயக்குநர் இரா.சரவணன் இது குறித்து ஹெச்.வினோத் சொன்ன விஷயத்தை பேசியிருக்கிறார்.  

Written by - Yuvashree | Last Updated : Jan 22, 2026, 02:22 PM IST
  • ஜனநாயகன் திரைப்பட பிரச்சனை!
  • ஹெச்.வினோத் சொன்னது
  • இதோ முழு விவரம்..
தீராமல் நீளும் ஜனநாயகன் பட பிரச்சனை..ஹெச்.வினாேத் சொன்ன பதில்! பிரபலம் பகிர்ந்த விஷயம்..

H Vinoth Jana Nayagan Issue Era Saravanan : பொங்கலுக்கு வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம், யாரும் எதிர்பார்க்காத வகையில் தள்ளிப்போய் இருக்கிறது. இதற்கு காரணம், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததுதான். இதையடுத்து, இந்த பிரச்சனை குறித்து ஹெச்.வினோத் தன்னிடம் பேசியிருப்பதை பிரபல இயக்குநரான இரா.சரவணன் பேசியிருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

ஜனநாயகன் பிரச்சனை:

ஹெச்.வினாேத் இயக்கத்தில் உருவான படம், ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தை  தணிக்கை சான்றிதழ் இல்லாமல் ரிலீஸ் செய்ய முடியாது என்கிற பிரச்சனை எழுந்தது. இதையடுத்து, பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகியது. இதையடுத்து தனி நீதிபதி படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து படக்குழு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதில் தங்களால் தலையிட முடியாது என்று கூறி, உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

சமீபத்தில், ஜனநாயகன் படத்தின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. நாள் முழுவதும் இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. இறுதியில், இது குறித்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

ஹெச்.வினோத் குறித்த இரா.சரவணன் கூறியது:

ஜனநாயகன் பட பிரச்சனையில், ஹெச்.வினோத்தின் நிலை குறித்து பிரபல இயக்குநர் இரா.சரவணன் பேசியிருக்கிறார்.

"எந்த விதமான பிரச்சனைக்கும் தற்சோர்வு அடையாத ஆள் வினோத். ஏனென்றால், இந்த மாதிரி ஒரு படம் விஜய் சாரோட கடைசி படம்னு சொல்றப்பவே இதுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வரும், இது எல்லாமே ஓரளவுக்கு கெஸ் பண்ணக்கூடிய ஆள்தான். பெரிய அறிவாளி.அதனால நெருக்கடிகளும் பிரச்சனைகளும் அவரை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தியிருக்காது. 

ஆனா ஒரு விஷயத்தை சொல்ல முடியும். ஒரு தனிப்பட்ட துறையில் இவ்வளவு நெருக்கடிகளுக்கு ஆளாகும் அளவுக்கு அந்தப் படத்தில் எதுவும் சிக்கல்கள் இருக்கான்னா நிச்சயமா, கண்டிப்பா கிடையாதுங்கிறத என்னால சொல்ல முடியும்.

பெரும்பாலும் இந்த மாதிரி விஷயங்கள் தனிப்பட்டதுக்கு உட்படுமா உட்படாதான்னு தெளிவெல்லாம் நம்மள தாண்டி 100 மடங்கு வினோதுக்கு நல்லா தெரியும். இந்த வார்த்தை சென்சார்ல மியூட் ஆகும். இந்த பின்னணி சென்சார்ல கவனிச்சா இதெல்லாம் பக்கா தெளிவு கொண்ட ஒரு இயக்குநர் அவரு.

தனிப்பட்டத்தில் சிக்கல் உருவாக்கக் கூடாதுங்கிற தெளிவெல்லாம் ரொம்ப அதிகமா கொண்டவர் அவர். அப்படி இருக்கறப்போ அவரைத் தாண்டி ஏதோ ஒண்ணு நடக்குது. அப்படிங்கிற தெளிவு அவருக்கு இருக்கும். இதுல வந்து நம்ம பங்களிப்புன்னு ஒண்ணு இல்ல. இது வேற ஏதோ ஒண்ணு நடக்குது.

இந்த மாதிரியான பிரச்சனைகள் அவரை ஒருபோதும் சோர்ந்து போக வைக்காது. அது எனக்கு தெளிவா தெரியும். எல்லா பிரச்சdனைகளையும் எதிர்கொள்ளுற மனுஷன் அவரு.பொங்கல் சமயத்துல அந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்கணுமேங்கிற எண்ணம் அவருக்கு வந்திருந்துச்சு. அதுவும் குறிப்பா விஜய் சாரோட படம். எந்த அளவுக்கு செலிப்ரேட் பண்ணியிருப்பாங்க மக்கள். 

அப்போ ஒரு பொங்கல் கொண்டாட்டத்தையே நீர்த்துப் போற அளவுக்கு நம்ம பட சிக்கல் ஆகியிடுச்சுங்கிற கவலை கண்டிப்பா அவருக்கு இருந்திருக்கும். நான் சமீபத்துல பேசினப்போ “நம்மள தாண்டி ஏதோ நடக்குது, அமைதியா இருப்போம்”னு அவர் சொன்ன பதில்தான்” என்று கூறியிருக்கிறார்.d

மேலும் படிக்க | மாளவிகா மோகனன் ஓப்பனா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. பற்றி எரியும் கோலிவுட்

மேலும் படிக்க | தங்கம் விக்கிற விலைக்கு..வீட்டில் தங்க டாய்லெட் வைத்திருக்கும் அமிதாப் பச்சன்! விலை எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News