)
Karthik Subbaraj Next Movie Hero Retro : தமிழ் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாக இருக்கிறது, ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்கி முடித்த பிறகு, அவர் எந்த ஹீரோவுடன் கைக்கோர்க்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ்:
சினிமா துணை நடிகர் கஜ்ராஜ்ஜின் மகன், கார்த்திக் சுப்புராஜ். இவர், நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு வந்த இயக்குநர்களுள் ஒருவர். இவர் எடுத்த குறும்படத்தை, கொஞ்சம் கதையாக வளர்த்து “பீட்ஸா” எனும் பெயரில் எடுத்தார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம், பின்னர் பெரிய ஹிட் ஆனது. இதையடுத்து இவரையும் பலருக்கு தெரிய ஆரம்பித்தது.
வெகு சில படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். இருப்பினும், இவர் இந்த அளவிற்கு ஹிட் ஆகியிருக்க காரணம், இவரது கதையின் நேர்த்திதான். அதற்கு இறைவி மற்றும் ஜிகர்தண்டா ஆகிய படங்கள் சான்று. இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பட்டத்தை மட்டுமல்ல, ‘கம்-பேக்’ இயக்குநர் என்ற பெயரையும் பெற்றிருக்கிார். காரணம், தாேல்வி படங்களாகவே கொடுத்துக்கொண்டிருந்த ஹீரோக்கள், இவரது இயக்கத்தில் நடித்த பின்பு கம்-பேக் கொடுத்திருக்கின்றனர்.
ரெட்ரோ படம்:
சூர்யாவை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், ஸ்வாசிகா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சூர்யா 90ஸ்களில் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் இருக்கிறார். இது சூர்யாவின் 44வது படமாகும். கடைசியாக கங்குவா திரைப்படத்தில் தோல்வியை கொடுத்த சூர்யாவிற்கு, ரெட்ராே படமாவது அவருக்கு கம்-பேக் படமாக இருக்குமா என கூறப்படுகிறது.
அடுத்த ஹீரோ யார்?
கார்த்திக் சுப்புராஜ்ஜின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அவர், இவருக்கு மிகவும் நெருக்கமான ஹீரோதான். அந்த 40 வயது நடிகர் வேறு யாருமில்லை, சிவகார்த்திகேயன்தான்.

சமீபத்தில் அவரை நேரில் சந்தித்த கார்த்திக் சுப்புராஜ், அவரிடம் கதை சொன்னதாகவும் இதற்கு சிவகார்த்திகேயன் ஓகே சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோவின் அடுத்தடுத்த படங்கள்..
சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் திரையுலகின் படு பிசியான நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அமரன் படத்தில் நடித்து ரூ.100 கோடி வசூல் கொடுத்த நாயகனாக மாறிவிட்ட பிறகு, இப்போது இவரை பல இயக்குநர்கள் சுத்து போட்டுள்ளனர். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘மதராஸி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். கூடவே, சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களும், தற்போது பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கிறார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ