தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?

Mani Ratnam Movie After Thug Life : மணிரத்னம், தக் லைஃப் படத்தை இயக்கியிருப்பதை தொடர்ந்து, அவரது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : May 19, 2025, 11:14 AM IST
  • மணி ரத்னம் இயக்கிய தக் லைஃப்
  • அடுத்து இயக்கும் படம்..
  • ஹீரோ யார் தெரியுமா?
தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?

Mani Ratnam Movie After Thug Life : தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களுள் ஒருவராக விளங்குபவர், மணிரத்னம். இவர், சமீபத்தில் தக் லைஃப் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, அவரது அடுத்த திரைப்படம் குறித்த தகவல், தற்பாேது வெளியாகி இருக்கிறது.

தனித்துவமான இயக்குநர் மணிரத்னம்..

தமிழ் திரையுலகில் இருக்கும் அனைத்து இயக்குநர்களும், தனித்துவமானவர்கள்தான். அவர்களில், காலத்திற்கு ஏற்றவாறு படங்களை எடுத்து, அனைத்து வயது தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த இயக்குநராக இருப்பவர், மணிரத்னம். முதல் படத்தில் தோல்வி அடைந்தாலும், இவரது மெளன ராகம் திரைப்படம், மெளமாக அவரை பலருக்கு அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, ரோஜா என வரிசையாக ஹிட்டுக்கு மேல் ஹிட் கொடுத்தார்.

அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற இயக்குநர்..

மணி ரத்னம் படத்தில் வரும் ஹீரோவையும் சரி, ஹீரோயினையும் சரி, அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காரணம், அவர் காலத்திற்கு ஏற்றவாறு கதைகளையும், அதற்கு பொருத்தமான ஹீரோ-ஹீரோயின்களையும் தேர்ந்தெடுப்பார். அந்த வகையில் அவர் எடுத்த ஓ காதல் கண்மணி, பெரிய ஹிட் அடித்தது. இவரது தோல்வியுற்ற படங்களுக்கும் கூட, பின்னாளில் சேர்ந்த ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு, தக் லைஃப் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

தக் லைஃப்:

நாயகன் படம் வெளியாகி, 38 வருடங்கள் கழித்து கமல்ஹாசனுடன் மணி ரத்னம் கைக்கோர்த்திருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தில், கமல்ஹாசனுடன் சேர்ந்து, சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

கமல்ஹாசன், ‘ரங்கராய சக்திவேல் நாயக்கன்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில், சிம்பு ‘அமர்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் கேங்க்ஸ்டராக நடித்திருக்கிறார். அவர் எடுத்து வளர்க்கும் மகனாக இருக்கும் சிம்பு, இறுதியில் அவருக்கே எதிராக மாறுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில், கமல்ஹாசனுக்கு மனைவியாக அபிராமி நடித்திருக்கிறார், அவரது காதலியாக த்ரிஷா நடித்திருக்கிறார். 

அடுத்த படம்..

மணிரத்னமின், தக் லைஃப் திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதை தொடர்ந்து, அவரது அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் எழுந்துள்ளது. இதையடுத்து, இது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம், ஒரு காதல் கதையாக இருக்கும் என்றும், இதில் அவரது ஃபேவரட் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானே பணிபுரிவார் என்றும் கூறப்படுகிறது.

Naveen Polishetty

ஹீரோ யார்?

மணிரத்னம், தனது காதல் கதைகளில், இளம் கதாநாயகர்களை ஹீரோக்களாக வைப்பார். இப்போது தக் லைஃப் படத்திற்கு பிறகு இயக்க இருக்கும் படத்தில் தெலுங்கு நடிகரான நவீன் பொலிஷெட்டியை அவர் ஹீரோவாக நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். வரும் ஜூன் 5ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் ரிலீஸாவதை தொடர்ந்து, இந்த காதல் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தக் லைஃப் படத்தில் மூன்று விஷேச ஹைலைடுகள்....திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்!

மேலும் படிக்க | Thug Life என்றால் என்ன? கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுக்கு இப்படி ஒரு அர்த்தமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News