)
Mani Ratnam Angry With Thug Life Cast Due To Controversies : ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படம், தக் லைஃப். இந்த படத்தை மணி ரத்னம் இயக்கியருக்கிறார். இந்த படமும் படக்குழுவினரும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது.
தக் லைஃப் திரைப்படம்:
கமல்ஹாசனும் மணிரத்னமும் நாயகன் படத்திற்கு பிறகு 38 வருடங்கள் கழித்து இணைந்திருக்கும் திரைப்படம், தக் லைஃப். இந்த படத்தில் கமல், ரங்கராய சக்திவேல் நாயக்கன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு இணையான கேரக்டரில் சிம்பு நடித்திருக்கிறார்.
தக் லைஃப் படத்தில் சிம்பு-கமலை தாண்டி, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷமி. அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் நிலையில் அப்படம் குறித்த ப்ரமோஷன் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடைப்பெற்று வருகிறது.
தக் லைஃப் சர்ச்சைகள்..
தக் லைஃப் திரைப்படத்தின் டைட்டில் வெளியான போது, கமலின் பெயர் ‘ரங்கராய சக்திவேல் நாயக்கன்’ என்று இருந்தது, பலர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும் போது இந்த சர்ச்சைகள் காணாமல் போனது.
சமீபத்தில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, அவர் குறித்து மேடையில் பேசிய கமல், “கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது” என்று கூறிவிட்டார். இது, கன்னட மொழி பேசுபவர்கள் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. அது மட்டுமன்றி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், கமல் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த கமல், “நான் தவறாக எதுவும் பேசவில்லை, அப்படி பேசியிருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன்” என்று கூறினார். இதனால் கர்நாடகாவில் படம் வெளியாகுமா, வெளியாகாதா என்கிற குழப்பம் எழுந்துள்ளது.
சின்மயி பிரச்சனை..
தக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘முத்த மழை’ பாடலை, தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். தக் லைஃப் படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு வர்ஷனைத்தான் சின்மயி பாடியிருக்கிறார். ஆனால் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி அதனை தமிழில் மேடையில் பாடினார். #MeToo பிரச்சனைக்கு பிறகு, பாடகி சின்மயின் குரலை எங்கும் பயன்படுத்த கூடாது என்று ராதாரவி தலைமையிலான டப்பிங் சங்கம் தடை விதித்ததாக கூறப்படுகிறது. அதை மீறி சின்மயியின் குரலை பயன்படுத்தியவர்கள், பிரச்சனையை சந்தித்திருக்கின்றனர்.
இப்போது, சின்மயியின் பாடல் வைரலானதை தொடர்ந்து, தீ-யின் வர்ஷனை விட, அவர் பாடியது நன்றாக இருப்பதாக ரசிகர்கள் இணையம் முழுவதும் கூறி வருகின்றனர். இதனால், “தீ பாடியது பெஸ்டா? சின்மயி பாடியது பெஸ்டா?” என்ற விவாதமும் எழுந்துள்ளது.
கடுப்பில் மணிரத்னம்..?
ஒரு படம் வெளியாகிறது என்றால், அந்த படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்றுதான் பலரும் எதிர்பார்ப்பர். மணிரத்னம், தனது படங்களுக்காக எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்திருந்தாலும், இப்போது சின்மயியை மேடையில் பாட வைத்தது தேவையற்ற விவாதத்தை கிளப்பியிருப்பதால் கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ