இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான ருத்ர தாண்டவம்

இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரானது ருத்ர தாண்டவம் திரைப்படம் இருக்கும் என்று சொல்கிறார் இயக்குநர் மோகன் G. திமுக, பெரியார் என அது யாராக இருந்தாலும் சரி என சூளுரைக்கிறார் ருத்ர தாண்டவம் இயக்குநர்.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 23, 2021, 04:03 PM IST
  • இயக்குநர் மோகன் ஜியின் ருத்ர தாண்டவம்!
  • அக்டோபர் 1 முதல் வெள்ளித்திரையில்
  • இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரானது ருத்ர தாண்டவம்
இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிரான ருத்ர தாண்டவம்

சென்னை: இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிரானது ருத்ர தாண்டவம் திரைப்படம் இருக்கும் என்று சொல்கிறார் இயக்குநர் மோகன் G. திமுக, பெரியார் என அது யாராக இருந்தாலும் சரி என சூளுரைக்கிறார் ருத்ர தாண்டவம் இயக்குநர்.

ரிச்சர்ட், கவுதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் தயாரான இந்த திரைப்படம் அக்டோபர் முதல் தேதியில் இருந்து திரைக்கு வர உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், திரைப்படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். 

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ருத்ர தாண்டவத்தின் இயக்குநர் மோகன், இந்து மதத்தை அழிக்கும் வேலைகள், நமக்கு தெரியாமலேயே நாசூக்காக நடைபெற்று வருகிறது என்று வருத்தப்பட்டார். இதற்காக பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்துக்களும் அல்லாமல் கிறிஸ்தவர்களும் அல்லாமல் சிலர் அதற்காக தீவிரமாக பணியாற்றுகிறார் என ஒரு பாதிரியார் சொன்னதன் அடிப்படையிலே, அதை கருப்பொருளாக வைத்து,  இந்த திரைப்படத்தை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். 

Also Read | ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படம் பற்றிய அப்டேட்!

இயக்குநரின் கருத்துக்கு எதிர் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், திமுக, பெரியார் என இந்துக்களுக்கு எதிராக பேசும் எல்லோரையும்  சேர்த்துதான் சொல்கிறீர்களா என கேட்டனர். 

அதற்கு பதிலளித்த மோகன் ஜி, இந்து மதத்தின் குறைகளை சொல்வது தவறில்லை, ஆனால், இந்து மதத்தை அழிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக திரைப்படம் எடுத்துக் கொண்டே இருப்பேன், ஏனென்றால் நான் இந்து மதத்தை நேசிக்கிறேன் என்று பதிலளித்தார். 

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் உரிமை அனைத்துமே எனக்கும் இருக்கிறது. சாலை என்பது எப்படி அனைவருக்கும் ஒன்றோ, அதேபோலத் தான் உரிமைகளும் அனைவருக்கும் ஒன்றானதே என்று இயக்குநர் மோகன் தெரிவித்தார்.

ருத்ர தாண்டவம் படத்திற்கு முன்னதாக, திரெளபதி என்ற திரைப்படத்தை எடுத்த இயக்குநர் மோகனுக்கு அந்த திரைப்படம் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. விமர்சனங்களும் இருந்தாலும், அதையும் தாண்டி பெயர் சொல்லும் படமாக இருந்தது திரெளபதி. அந்தப் படத்தின் நாயகனான ரிச்சர்ட் தான் ருத்ர தாண்டவத்திலும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

Read Also | இதுவரை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விஜய் - அஜித் படங்கள்!

திரைப்படத்தை தொடங்கும்போதே அவர் வெளியிட்ட பதிவில் ருத்ர தாண்டவம் எப்படி இருக்கும் என்பதை இயக்குநர் கோடிட்டு காட்டிவிட்டார். “அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்போம்... ஈசன் அருளால் அனைத்து செயல்களும் நல்லதாகவே நடக்கும்...” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாக இயக்குநர் மோகன் வெளியிட்ட பதிவில் ருத்ர தாண்டவம் படத்தில், சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தில் இருந்து சில வரிகளை பயன்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
அவை: 
ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்
டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம்
சகார சந்த்ததாண்டவம் தனோத்து சிவ சிவம்..

Read Also | தள்ளிப் போகிறதா விஜய்யின் பீஸ்ட்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News