Mysskin Says He Wants To Leave Cinema : ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ'ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
திரையுலகினர் பேச்சு..
ஜியோ ஸ்டார் ரீஜனல் ஜெட் கிருஷ்ண குட்டி, “ராம் இந்த கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்துவிட்டது. இந்த படத்தை தயாரிக்க நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அப்பா- மகன் எமோஷன் இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.
எடிட்டர் வி.எஸ். மதி, “எனக்கு முதல் படத்தை கொடுத்த இயக்குநர் ராமுக்கும், இயக்குநர் மாரி செல்வராஜூக்கும் நன்றி. என் முதல் படமே இவ்வளவு பெரிய படமாக அமைந்ததில் மகிழ்ச்சி. என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, “வாய்ப்பு தந்த ராம் சாருக்கு நன்றி. ஒரு படத்தையும் இசையையும் எப்படி பார்க்க வேண்டும் என்பதை ராம் சாரிடம் கற்றுக் கொண்டேன். மதன் கார்க்கி சாருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் மதன் கார்க்கி, “ராமுடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. ‘பறந்து போ’ படத்தில் வேறு ஒரு ராம் சாரைப் பார்த்தேன். இந்தப் படத்திற்கு மொத்தம் 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்கள் படத்தில் அமைந்துள்ளது. நடிகர் சித்தார்த்தும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அண்ணன், மனைவி, மகன் என மூன்று உலகங்களுக்குள் நடக்கும் இணைப்பு- போராட்டம்தான் இந்தக் கதை. மெல்லிய சிரிப்பு இந்தப் படம் முழுக்க இருக்கும். என்னுடைய 1000 ஆவது பாடல் இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன். நன்றி” என்றார்.
நடிகர் மிர்ச்சி சிவா, “ராம் சாருடன் படம் என்றம் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது. ’நானே இதுவரை செய்யாத படம் இது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’ என்று ஸ்கிரிப்ட் கொடுத்தார். உடனே ஒத்துக் கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநராக மட்டுமில்லாமல் எல்லா வேலைகளும் அவர் எடுத்துப் போட்டு செய்தார். அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். படத்தில் பணியாற்றியுள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் அனைவரது ஆதரவும் வேண்டும்” என்றார்.
சினிமாவை விட்டு போக முடிவு..
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில் " இயக்குநர் ராம் இந்த கதை சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு நாளைக்கு படவிழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்து ஐந்து முதல் ஆறு ஃபோன் கால்கள் வருகிறது. இது போன்ற விழாவுக்கு என்னை அழைத்தால் இனிமேல் அதற்கான தொகையாக குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் கொடுத்து விடுங்கள். சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ராம் படங்களை பார்க்கும் பொழுது எப்போதுமே அதிசயம் போல தான் இருக்கும். 'பறந்து போ' படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். அழகான படம்" என்றார்.
இயக்குநர் ராம், " எல்லோரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார். ஜியோ ஹாட்ஸ்டார் எனக்கு வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம். பிரதீப்பை பார்த்தாலே தனி எனர்ஜி வரும். சிவா,கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர் இந்த செட்டில் தான் நாம் ரிலாக்ஸாக இருந்தேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை முதலில் பார்த்து வாழ்த்து சொன்னார். அவர் படம் பார்த்து வாழ்த்தியதுடன் உலக அளவில் வெளியிடுவது எங்களின் பெரும் பலம். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.
மேலும் படிக்க | ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
மேலும் படிக்க | காவு வாங்கும் காந்தாரா படம்! 3 பேர் தொடர் மரணம்..காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ