ஜெயிலர் 2-க்கு பிறகு நெல்சன் இயக்கும் படம்! ‘இந்த’ 41 வயது நடிகர்தான் ஹீரோ..

Nelson Dilipkumar Next Movie After Jailer 2 : ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். இவரது அடுத்த படத்தில் எந்த ஹீரோ நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2025, 11:38 AM IST
  • ஜெயிலர் 2க்கு அடுத்து நெல்சனின் படம்..
  • இந்த பெரிய ஹீரோ நடிக்கிறார்..
  • யார் தெரியுமா?
ஜெயிலர் 2-க்கு பிறகு நெல்சன் இயக்கும் படம்! ‘இந்த’ 41 வயது நடிகர்தான் ஹீரோ..

Nelson Dilipkumar Next Movie After Jailer 2 : ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து, இந்த படத்தை எடுக்கும் நெல்சன் திலீப்குமார் அடுத்து எந்த படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறித்தும் அவரது அடுத்த பட ஹீரோ யார் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Add Zee News as a Preferred Source

ஜெயிலர் 2:

2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், மெகா ஹிட் அடித்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த படத்தில் ரஜினிகாந்த், நீண்ட நாட்களுக்கு பிறகு காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் சேர்ந்து கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமன்றி, தமன்னாவும் நடித்திருந்தார்.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கு இந்த ஷூட்டிங் நடைப்பெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் இணைந்திருக்கிறார். ஏற்கனவே, ஜெயிலர் 2 படத்தின் ப்ரமோ ஷூட் கோவாவில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் அகியாேர் நடித்திருந்தனர்.

நெல்சனின் அடுத்த படம்..

இயக்குநர் நெல்சன் திலீப்குமார், கோலமாவு காேகிலா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இந்த படம், கவனம் பெற்றதை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இது, பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து, அவருக்கு பீஸ்ட் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, ரஜினியை வைத்து ஜெயிலர் படம் மூலம் பெரிய ஹிட்டும் கொடுத்தார். தற்போது, இவரது கவனம் பான்-இந்திய நடிகர் ஒருவரின் பக்கம் திரும்பியுள்ளது. அந்த நடிகரும் ஒரு பெரிய ஸ்டார் நடிகர்தான். 41 வயதாகும் அவர் பல கோடி வசூலித்த படங்களில் நடித்துள்ளார். அவர் யார் தெரியுமா?

யார் அந்த நடிகர்..

அந்த நடிகர் வேறு யாருமில்லை, ஜூனியர் என்.டி.ஆர்தான். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் இவருக்கு ராஜமௌலி இயக்கிய RRR படம் மூலம் உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது.  நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தை முடித்த கையோடு ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு ராக் (Rock) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Nelson Dilipkumar

அனிருத் இசை..

இதுவரை நெல்சன் திலீப்குமார் இயக்கிய அத்தனை படங்களுக்கும் இசையமைத்தவர், அனிருத்தான். இவர்கள் கூட்டணியில் உருவான அந்த படங்களின் பாடல்களும் பெரிய ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து, ஜூனியர் NTR-ஐ வைத்து நெல்சன் இயக்கும் படத்திற்கும் இவரே இசையமைப்பதாக கூறப்படுகிறது.

அட்லீயின் வழியில் நெல்சன்?

தமிழ் இயக்குநர் அட்லீ, இதுவரை இயக்கியிருப்பதே 5 படம்தான். ஆனால், அந்த 5 படங்களுமே பெரிய ஹிட் அடித்துள்ளது. அதிலும் 3 படங்கள் விஜய் நடித்தது. கடைசியாக தமிழில் பிகில் படத்தை இயக்கிய அவர், அடுத்து ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி அங்கிருக்கும் ரசிகர்களை கவர்ந்து விட்டார். தற்போது, நெல்சனும் அவர் வழியில் தெலுங்கு சினிமா ரசிகர்களை பிடிப்பதற்காக இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

மேலும் படிக்க | கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?

மேலும் படிக்க | கூலி படத்தில் அமீர்கான் போல-ஜெயிலர் 2 படத்திலும் பாலிவுட் நடிகர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News