)
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவர் நெல்சன். இவர் கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து டாக்டர் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படமும் சூப்பர் ஹிட்டான நிலையில், நடிகர் விஜய்யை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்தது.
அவரை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படம் இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. ரூ. 650 கோடிக்கு மேல் வசூலும் செய்தது. இவரது டார்க் காமெடி அனைவரையும் கவர்ந்த நிலையில், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரானார். தற்போது இவர் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் நெல்சனின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அவரது அடுத்த படத்தை வம்சி தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் இயக்குநர் பெயர் உங்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அவர் இயக்குநர் நெல்சனைதான் மறைமுகமாக குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து வார் 2 என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களை முடிந்த, பின்னர் அவர் நெல்சன் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ