பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் கடந்த 25ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. மனோஜ் பாரதிராஜா தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தை அவரது தந்தை பாரதிராஜா இயக்கினார். ஆனால் அப்படத்தின் பாடல்கள் ஹிட்டானாலும்,. படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
அதனைத் தொடர்ந்து சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும், அவரது படங்கள் ஏதுவும் நல்ல வரவேற்பை பெறவில்லை. தமிழ் சினிமாவில் அவருக்கான ஒரு இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. பின்னர் நடிப்பில் பெரிய வரவேற்பு கிடைக்காத காரணத்தினால், இயக்குனர் ஆகலாமென்ற எண்ணத்தில் இயக்குநர் ஷங்கருக்கு உதவி இயக்குநராக எந்திரன் படத்தில் பணியாற்றினார்.
மேலும் படிங்க: ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து!
இதையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தன்னால் ஒரு ஹீரோவாகும் இயக்குநராகவும் சாதிக்க முடியாத மன அழுத்தம் அவரிடம் இருந்ததாக கூறப்படுகிறது. இதுவே அவரின் மரணத்திற்கு காரணம் என்றும் பலரும் கூறினர். இந்த நிலையில், மனோஜ் பாரதிராஜாவின் மரணம் குறித்து இயக்குநர் பேரரசு பேசி உள்ளார்.
யாருடைய அழுத்தமும் காரணம் இல்லை
அதாவது, சினிமா பிரபலங்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் சில பிரபலங்கள் தங்களுக்கு தோன்றியதை வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். அவர்கள் பேசுவது இறந்தவர்களின் குடும்பத்தினரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை உணராமல் பேசுகிறார்கள். பாரதிராஜாவின் மகன் என்ற காரணத்தினால் தான் தனக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக என்றைக்காவது மனோஜ் கூறியிருக்கிறாரா? எதுவும் தெரியாமல் இப்படி பேசுவது தவறு என இயக்குநர் பேரரசு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் அவருடைய அலுவலகத்திற்கு அடிக்கடி செல்வேன். அவர் எப்போது சந்தோஷமாக இருப்பவர். வாழ்க்கையில் அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பாரே தவிர தேவையில்லாம எதையும் யோசிப்பவர் கிடையாது. வீண்பழி சுமத்த வேண்டாம். மனோஜுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவே அவரது மரணத்திற்கு காரணமே தவிர மற்றபடி யாருடைய அழுத்தமும் காரணம் இல்லை என கூறினார்.
மேலும் படிங்க: 40-ஐ கடந்தும் சிங்கிளாக சுற்றும் நடிகர்கள்!! லிஸ்டு ரொம்ப பெருசு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









