Paranthu Po Review : இளம் பெற்றோர்களுக்கு முக்கிய படம்..பறந்து போ படத்தின் திரைவிமர்சனம்!

Paranthu Po Movie Review Tamil : ராம் இயக்கத்தில் மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுன் ரியான், அஞ்சலி நடித்துள்ள பறந்து போ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Written by - RK Spark | Edited by - Yuvashree | Last Updated : Jul 4, 2025, 01:34 PM IST
  • பறந்து போ படம் எப்படி?
  • மீண்டும் ஜெயித்தாரா ராம்?
  • படம் எப்படி? இதோ விமர்சனம்!
Paranthu Po Review : இளம் பெற்றோர்களுக்கு முக்கிய படம்..பறந்து போ படத்தின் திரைவிமர்சனம்!

Paranthu Po Movie Review Tamil : ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமாக உருவாகியுள்ள 'பறந்து போ' படம் இன்று ஜூலை 4 முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ராம் எழுதி இயக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை மதி வி.எஸ் மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

படத்தின் கதை:

கணவன் மனைவியான மிர்சி சிவா மற்றும் கிரேஸ் ஆண்டனிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் தங்களது மகனுக்கு கடன் வாங்கியும் தேவையான அனைத்தையும் செய்து வருகின்றனர். சென்னையில் இஎம்ஐ- ல் வீடு, பைக்  போன்ற அனைத்தையும் வாங்கி அந்த கடனை கட்ட முடியாமல் சிரமப்படுகின்றன. வேலைக்காக கிரேஸ் ஆண்டனி வெளியூர் செல்ல இரண்டு நாட்கள் மிர்சி சிவா தனது மகனை பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அப்போது இருவரும் பைக் டிராவல் செய்ய திட்டமிடுகின்றனர். அதில் ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களும், இருவருக்கும் இடையே ஏற்படும் புரிதலும் தான் பறந்து போ படத்தின் கதை. 

மாறுபட்ட படைப்பு..!

இதற்கு முன்பு வெளியான இயக்குனர் ராமன் படங்களுக்கும் இந்த படங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. ஒரு முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் இந்த படத்தை எடுத்துள்ளார் ராம். இந்த கதையில் மிர்சி சிவா மிக அருமையாக பொருந்தியுள்ளார். அவரை தவிர வேறு யாரையும் இந்த ஒரு கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்க முடியவில்லை. தனது குழந்தையிடம் கோபப்பட முடியாத தந்தையாக, குழந்தைத்தனத்தையும் குறும்புத்தனத்தையும் ரசிக்கும் ஒரு தந்தையாக நல்ல ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். மறுபுறம் கிரேஸ் ஆண்டனி அமைதியான அதேசமயம் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் காட்சிகளில் பல இடங்களில் கைதட்டல்களை பெறுகிறார். 

இவர்களின் மகனாக நடித்து இருக்கும் மிதுன் ரியான் அந்த வயதிற்கு ஏற்ற குறும்புத்தனதுடன் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அவருக்கும் அவரது அப்பா மிர்சி சிவாவிற்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்களும், சண்டைகளும் ரசிக்க வைக்கிறது. முதல் பாதியில் வரும் பைக் சேசிங், மலையில் ஏறும் காட்சிகள், மரத்தின் மேல் நடக்கும் காட்சிகள் என அனைத்தும் ரசிக்க வைக்கிறது. 

பெற்றோர்களுக்கான கதை!

இன்றைய இளம் தலைமுறை குழந்தைகளின் மனநிலையும், வேலைக்கு செல்லும் பெற்றோர்களால் குழந்தைகளுக்கும் ஏற்படும் மனநல மாறுபாடையும் அழகாக பறந்து போ படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராம். அதிரடி காட்சிகள் இல்லாத, திருப்பங்கள் இல்லாத ஒரு அமைதியான பீல் குட் படமாக பறந்து போ உள்ளது. படம் முழுக்க வசனங்களை வைத்து பாடலாக மாற்றிய முயற்சி நன்றாக ஒர்க் ஆக்கியுள்ளது. இதற்கு மதன் கார்க்கிக்கு தனி பாராட்டுக்கள். படத்தில் கிட்டதட்ட 20 பாடல்கள் இருக்கும், அனைத்தும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பாடல்களில் அசத்தி உள்ளார். இன்றைய இளம் தலைமுறை பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் பறந்து போ.

மேலும் படிக்க | சித்தார்த்தின் 3 BHK படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

மேலும் படிக்க | 3BHK, ஃபீனிக்ஸ், பறந்து போ: 3ல் எது டாப்? எது Flop? ரசிகர்களுக்கு பிடித்த படம் எது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News