ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?

ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படத்தை சிறப்பு காட்சி மூலம் இயக்குநர் வெற்றிமாறன் பாத்துள்ள நிலையில், அப்படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 31, 2025, 10:10 PM IST
ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல், தாராள பரபு, பார்க்கிங், லப்பர் பந்து என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். தற்போது நூறு கோடி வானவில், அந்தகாரம் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசன் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்து முடித்து உள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கால்யாணுடன் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மேலும் படிங்க: தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்.. யார் தெரியுமா?

இப்படத்தில் இடம் பெற்ற பீர் என்ற பாடல் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இப்படம் ஹரிஷ் கல்யாணின் கரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசன் படத்தை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் வெற்றி மாறனுக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இதையடுத்து டீசல் படத்தை பார்த்த இயக்குநர் வெற்றிமாறன் படம் குறித்து முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். அவர், "படம் நன்றாக உள்ளது. நன்றாக எடுத்துள்ளனர். படம் நிச்சயமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும்" என கூறியுள்ளார். 

மேலும் படிங்க: தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ..100 கோடி சம்பளம் வாங்குபவர்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News