Vetrimaaran Hints On Vada Chennai 2 Update : “அன்பு, செந்தில், குனா, ராஜன்..” போன்ற பெயர்களை கேட்டாலே நம் நினைவிற்கு முதலில் வரும் படம், வட சென்னை. இந்த படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் மீம் டெம்ப்ளேட் ஆக ஆகும் அளவிற்கு ரசிகர்களின் மனங்களில் பதிந்த படம் இது. வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் 2ஆம் பாகம் வருமா வராதா என்ற கேள்வி ரசிகர்களின் மனங்களில் நீண்ட நாட்களாக இருக்கிறது.
வட சென்னை 2:
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வரும் படங்கள், ஜனரஞ்சகமான கதைக்களம் கொண்ட படங்களாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஒரு கேங்க்ஸ்டர் கதையை குடும்ப ரசிகர்கள் பார்க்கும் வகையில் கொடுத்து, தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தனர். இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற நிலையில், இதன் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்னும் மர்மமாகவே உள்ளது.
இது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இயக்குநர் வெற்றிமாறனும் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறார். ரசிகர்களும் அதற்கு ஏற்றார் பாேல ரசிகர்களும் இவர் எந்த விழாவிற்கு சென்றாலும் வட சென்னை 2 படம் குறித்தே கேட்டு வருகின்றனர். அதே போல, சமீபத்தில் அவர் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது “வட சென்னை 2 எப்போ?” என்று ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கொடுத்த பதில், ரசிகர்களை குழப்பியுள்ளது.
வெற்றிமாறனின் குழப்பமான பதில்:
வெற்றிமாறன், ரசிகர்கள் “வடசென்னை 2 எப்போ?” என்று கேட்டதற்கு, “வரும் வரும்..சீக்கிரமாவே வரும்” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார். மேலும், “வட சென்னை 2 ஆரம்பித்தால் கூட அதற்கு இவ்வளவு எதிர்பார்ப்பு உங்களுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். இந்த உற்சாகம் அதன் பிறகு குறைந்து விடும் என்று நினைக்கிறேன்..சீக்கிரம் வரும்..” என்று கூறினார்.
"If we start #Vadachennai2 there won't be this much hype. The updates which everyone are asking about the film, gives more hype. It will come soon"
- VetriMaaran pic.twitter.com/tGabINPgKv— AmuthaBharathi (@CinemaWithAB) March 9, 2025
ரசிகர்கள் குழப்பம்..
வெற்றிமாறன், இப்படி அனைத்து பட விழாக்களிலும் வட சென்னை 2 அப்டேட் குறித்து கேட்கும் போதெல்லாம் “விரைவில் வரும்” என்று கூறுவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர், ஏதேனும் ஒரு வருடத்தை அல்லது மாதத்தை குறிப்பிட்டு சொன்னாலும் பரவாயில்லை, மொட்டையாக ஒரு பதிலை கூறுகிறாரே என்று ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில்தான் உள்ளனர்.
ஏன் இவ்வளவு தாமதம்?
வெற்றிமாறனும் தனுஷும் வட சென்னை படத்திற்கு பிறகு அசுரன் படத்திலும் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தனர். அதன் பிறகு இருவரும் வெவ்வேறு படங்களில் பிசியான காரணத்தால், வட சென்னை 2 படத்தில் இணைவது குறித்து சத்தம் காட்டாமல் இருக்கின்றனர். தனுஷ், தற்போது எக்கச்சக்க படங்களில் கமிட் ஆகி, 2 வருடங்களுக்கு யாருக்கும் கால்-ஷீட் கொடுக்க முடியாத நிலைமையில் இருக்கிறார். அதே போல வெற்றிமாறனும், வாடிவாசல் உள்பட இன்னும் ஒரு படத்தின் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, வட சென்னை 2 படம் வருவதற்கு இன்னும் தாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | வடசென்னை 2ல் தனுஷும் இல்லை, வெற்றிமாறனும் இல்லை.. அப்போ இவரா?
மேலும் படிக்க | வடசென்னை-2 படம் எப்போது? உறுதிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









