Vignesh Shivan : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருப்பவர், விக்னேஷ் சிவன். இவர், சமீபத்தில் தனக்கு கையில் எத்தனை கோடி இருந்தால் வீட்டில் பிள்ளைகளுடன் நிம்மதியாக இருப்பேன் என்பதை கூறியிருந்தார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Vignesh Shivan : கோலிவுட் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருக்கிறார், விக்னேஷ் சிவன். போடா போடி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், அதன் பின்னர் நானும் ரெளடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களை எடுத்தார். இதில் பெரும்பாலானவை ஃப்ளாப் ஆகி விட்டன. கடைசியாக அவர் இயக்கிய, காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பெருந்தோல்வி அடைந்ததை தொடர்ந்து, இப்போது இவர் இயக்கத்தில் உருவான LIK திரைப்படம் ரிலீஸாகி இருக்கிறது.
LIK திரைப்படம்:
‘லவ் டுடே’ படத்தில் நடித்து முடித்த கையாேடு, பிரதீப் ரங்கநாதன் கமிட் ஆன படம்தான், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK). இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடித்திருக்கிறார். சீமான், முக்கிய கதாப்பாத்திரத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். எப்போதோ எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம், நிதிப்பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் தள்ளிப்போன் இந்த படத்தை கடைசியில் நயன்தாராவே தயாரித்து வெளியிட்டார். கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
விக்னேஷ் சிவன் நேர்காணல்:
விக்னேஷ் சிவன், தனது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை ப்ரமோட் செய்வதற்காக பல யூடியூப் சேனல்களின் நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, தனது படம் குறித்தும், அஜித்தின் படத்தை நழுவ விட்டது குறித்தும், நயன்தாராவுக்கும் தனக்கும் இடையே இருக்கும் பந்தம் குறித்தும், தான் லைஃபில் செட்டில் ஆவது குறித்தும் பேசினார்.
“சண்டைன்னு வந்துட்டா..”
”சண்டை என்று வரும்போது, நயன்தாரா ஒரு உண்மையான டெரர்தான்; அவளுக்குக் கோபம் வரும்போது, அவள் முற்றிலும் வேறொரு ரூபமாக மாறிவிடுவாள். அவளுக்காகத் தியாகம் செய்பவன் நான்தான். திரைப்படங்களுக்காக நான் என்ன வரிகள் எழுதினாலும், முதலில் அதை நயன்தாராவுக்குத்தான் அனுப்புவேன்; அவளிடமிருந்து 'இதய எமோஜி' (Heart emoji) கிடைத்த பிறகுதான், அதை இசையமைப்பாளர்களுக்கு அனுப்புவேன்” என்று தனது மனைவி குறித்து விக்னேஷ் சிவன் பேசியிருந்தார்.
சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய படம்..
சிவகார்த்திகேயனின் 17வது படமாக, LIK உருவாக இருந்தது. ஆனால் சில காரணமாக இது நடக்கவில்லை. இது குறித்து பேசிய அவர், “LIK திரைப்படம் 2018-ஆம் ஆண்டிலேயே சிவகார்த்திகேயன் சாருடன் உருவாகியிருக்க வேண்டியது. ஆனால், தயாரிப்புக் குழுவினர் கதையில் சில மாற்றங்களைச் செய்ய விரும்பினர். நான் என் திரைக்கதையை அதிகம் மாற்றியமைக்க இயலவில்லை; ஏனெனில், நான் கதையை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு இயக்குனராக இருக்கிறேன்” என்று கூறினார்.
அஜித்தின் படம்
அஜித்துடன் விக்னேஷ் சிவன் ஒரு படத்தில் இணைய இருந்தார். ஆனால், அந்த படம் அறிவிக்கப்பட்ட பிறகு அதிலிருந்து அஜித் விலகிவிட்டார். இது குறித்து பேசிய அவர், "அஜித் குமார் சாருடன் பணியாற்றுவது எனது கனவாக இருந்தது; அந்தக் கதைக்காக மட்டுமே நான் 3 முதல் 4 ஆண்டுகள் உழைத்தேன். ஆனால் பட்ஜெட் மற்றும் தயாரிப்பு சார்ந்த சிக்கல்களின் காரணமாக, அந்தப் படம் கைவிடப்பட்டது. மேலும், படத்தின் இரண்டாம் பாதியை மாற்றியமைக்குமாறும் தயாரிப்புத் தரப்பு பரிந்துரைத்தது” என்று பேசினார்.
விக்னேஷ் சிவனின் ரிட்டயர்மெண்ட் ப்ளான்!
விக்னேஷ் சிவன், தனது நிதித்திட்டம் குறித்து பேசியிருந்தார். அப்போது, “300-350 கோடி சம்பாதிச்சு, FDல போட்டுட்டா 7 % வட்டியாக வருடத்திற்கு ரூ.21 கோடி என மாதத்திற்கு ரூ.1.5 கோடி , நாளுக்கு ரூ.30 லட்சம் வருமானம் வரும். பின்னர் பிள்ளைகளுடன் முழுமையாக நேரம் செலவிட்டு நிம்மதியா இருப்பேன்” என்று கூறியிருந்தார்.
ரூ.100 கோடி அடிச்சே ஆகணும்!
சமீபத்தில், LIK படத்தின் நன்றி தெரிவிப்பு விழா நடந்தது. இதில் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, விக்னேஷ் சிவன், எப்படியாவது இந்த படத்தை ரூ.100 கோடி ஹிட் ஆக்கியே ஆக வேண்டும் என்று பேசியிருந்தார். தொடர்ந்த், “இந்தப் படம் ரிலீஸ் ஆனதே எனக்கு ஒரு ப்ளாக்பஸ்டர். அது வெளியானது தான் எனக்கு பெரிய வெற்றி. ஏன்னா, எப்போதுமே பெரிய கனவு காண்றது சுலபமில்லை. அதுக்காக கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து வெளியே வரணும். எனக்கு வாழ்க்கை கம்ஃபர்ட்டாக இருந்திருக்கலாம். ஆனா அந்த கம்ஃபர்ட் ஜோனை உடைத்து, என்னை நான் சாலஞ்ச் பண்ணிக்கிட்டதுதான் இந்தப் படம்” என்று கூறினார். “இந்தப் படம் ஒரு காதல் கதைதான். ஆனா வழக்கமான மெலோட்ராமா இல்லாமல், ஒரு புதிய அனுபவம் கொடுக்கணும் என்ற முயற்சி தான் இது. அந்த முயற்சி தியேட்டரில் கைதட்டலாக மாறும்போது கிடைக்கும் சந்தோஷம் சொல்ல முடியாதது. ஒரு எழுத்தாளராக, இயக்குநராக நம்ம முயற்சி சிலருக்காவது வேலை செய்கிறது என்ற உணர்வு நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதற்காக ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!