Disappointed Tamil Films Of 2025 : கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த 2025ஆம் ஆண்டில், பல பெரிய பட்ஜெட் படங்களும், பெரிய ஹீரோக்களின் படங்களும் ஆரம்பத்திலேயே வெளியாக ஆரம்பித்துவிட்டது. சில படங்கள் சர்ப்ரைசாக வெற்றியையும் கொடுத்தது. 12 வருடங்களுக்கு முன் ஷூட்டிங் எடுத்து முடிக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் கூட இந்த ஆண்டில்தான் வெளியானது. ஆனால் ரசிகர்கள் எதிர்பாக்காத அளவில் பெரிய வெற்றி பெற்றது. அதே சமயத்தில், ரசிகர்கள் அதிகம் நம்பி “இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும்” என நினைத்த சில படங்கள் அவர்களை முட்டாளாக்கி இருக்கிறது. அவை என்ன என்ன படங்கள் தெரியுமா?
விடாமுயற்சி:
அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த படம் விடாமுயற்சி. இந்த படம் முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டிலேயே எடுக்கப்பட்டதால், இதன் மீது பலருக்கும் பல வித எதிர்பார்ப்பு இருந்தது. அஜித்திற்கு பிடித்த கார் ரேஸ் காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற்று இருந்தது. அது மட்டும் அல்லாமல், இயக்குனர் மகிழ்திருமேனி கதை என்பதால் ரசிகர்கள் இதன் மீதும் அதிக எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
மெதுவான திரைக்கதை, மனதில் ஒட்டாத வசனங்கள் படத்தில் அதிகமாக இருந்ததால் இதற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. இந்த படம் சுமார் 300 கோடி அளவில் உருவாக்கப்பட்ட நிலையில், ரூ.150 கோடி மட்டுமே உலக அளவில் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்த படங்களில் ஒன்றாகும்.
ரெட்ரோ:
இரண்டு ஆண்டுகளாக தியேட்டர் ரிலீஸ் இல்லாமல் இருந்த சூர்யாவிற்கு கங்குவா திரைப்படம் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படம் அவரை கவனித்து விட்டு நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர் இதற்கு முன்னர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் பெரிய ஹிட் கொடுத்ததால் அந்த நம்பிக்கை ரசிகர்களுக்கு இருந்தது.
படம் ரிலீஸ் ஆன பிறகு கதையை வேறாக மாறிப்போனது. படத்தின் பாடல்கள் பெரிய பிரமோஷன் ஆக அமைந்தாலும், திரைக்கதை தொய்வாக இருந்ததாலும் இதனை தியேட்டரில் சென்று பார்க்க பலர் விரும்பவில்லை கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல ஓபனிங் கலெக்ஷன் இருந்தாலும், பின்னாளில் வசூரில் சறுக்கியது.
தக் லைஃப்:
தக் லைஃப் படத்தை பார்த்துவிட்டு அதைப்பற்றி பேசும் சிலர் இந்த ஆண்டின், மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிய படம் இதுதான் என்று கூறுகின்றனர். கமல் ஏற்படுத்திய மொழி சர்ச்சை, கர்நாடகாவில் ரிலீஸ் பிரச்சினை, என அனைத்தையும் கடந்து உருவான இந்த படம், ரசிகர்களை பெரிதும் ஏமாற்றி இருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, மணிரத்னம்-கமல் கூட்டணி, சிலம்பரசனின் அசுரத்தனமான நடிப்பு என பல விஷயங்கள் படத்தில் ப்ளஸ்ஸாக இருந்தாலும், திரைக்கதையில் இருக்கும் ஓட்டைகளால் இப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மணிரத்தினம் படங்களை விரும்பி பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு கூட, இந்த படம், விரக்தியை ஏற்படுத்தி இருப்பதாக விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.
(பொறுப்பு துறப்பு: மேற்கூறிய தகவல்கள் யாவும் வெவ்வேறு தளங்களில் இருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து எழுதப்பட்டவை ஆகும். இந்த படங்கள் தோல்வி என்பதற்கோ, ரசிகர்களை ஏமாற்றியது என்பதற்கோ அதிகாரப்பூர்வ சான்றுகள் எதுவும் வழங்கப்படவில்லை. பொதுத்தளங்களில் ரசிகர்களின் விவாதங்கள் மற்றும் விமர்சனங்களை வைத்து மட்டுமே இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஜீ மீடியா (ZEE NEWS TAMIL) எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பது குறிப்பிடத்தக்கது)
மேலும் படிக்க | 2025-ல் இதுவரை ஹிட் ஆன 3 படங்கள்! என்னென்ன தெரியுமா? முழு லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









