)
Coolie Movie Update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர் கான், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் சாஹிர், உபேந்திரா என மெகா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. தற்போது இந்த திரைப்படம் உலகெங்கும் திரையரங்கில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது கலைப் பயணத்தில் 50வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்த சிறப்பான தருணத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. மறுபுறம் ரசிகர்கள் கூலி திரைப்படத்தின் ரிலீசை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
வெளிநாடுகளில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து, திரைப்படம் பார்த்த பார்வையாளர்கள் தங்கள் முதல் கருத்துக்களை சமூக வலைதளங்களில், குறிப்பாக X (முன்பு ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே Coolie படம் சிறப்பாக உள்ளதாக பலர் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த படத்தின் இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது என்றும் படத்தின் இண்டர்வல் சிறந்த இண்டர்வல் என்று கூறப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கூலி படத்தின் முதல் பாதி கொஞ்சம் சுமாராக இருந்தாலும், இன்டர்வலுக்கு பிறகு இருக்கும் காட்சிகள் வேகம் பெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் சிறப்பாக உள்ளது என்றுள்ளனர்.
#OneWordReview...#coolie: FANTASTIC &Massy
— taran adarsh (@Salman_fan_1989) August 14, 2025
Rating:
Screenplay, music, direction even performances are stunning. High level performance from
superstar #Rajinikanth - #LokeshKanagaraj ,done a fantastic job and persent very well!
BEST OF LUCK COOLI TEAM#coolieReview pic.twitter.com/Ee2FUWGDfu
We are witnessing the only actor in the world who is going to give hit as lead actor after spending 50years in cinema.#Rajinikanth #Coolie #CoolieFDFS #CoolieReview #CooliePowerhouse #Anirudh #Nagarjuna #Amirkhan pic.twitter.com/eHEuDlNT8k
— Avinash Dubey (@Iamavidube) August 13, 2025
Coolie Release : கூலி படம் எப்படியிருக்கு? விமர்சனம், ரசிகர்கள் கருத்து, இன்னும் பல அப்டேட்ஸ் இதோ..#CoolieFDFS | #Rajinikanth | #CoolieReview | #LokeshKanagaraj | #Zeetamilnewshttps://t.co/80rjecVf63
— Zee Tamil News (@ZeeTamilNews) August 14, 2025
இந்நிலையில் தற்போது திண்டுக்கல்லில் கூலி படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.
திண்டுக்கல்லில் மொத்தமாக மூன்று திரையரங்குகள் 8 திரைகள் உள்ளது. 8 திரையிலும் கூலி படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், இதில் ஒரே ஒரு திரையரங்கில் உள்ள ஒரே ஒரு திரையில் மட்டுமே கூலி படம் முதல் காட்சி அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.
மற்ற திரையரங்குகளில் மதியம் 12.30 மணிக்கு கூலி படத்தின் முதல் காட்சியானது திரையிடப்பட உள்ளது. இதனால் திண்டுக்கல்லில் உள்ள ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திரையிடப்பட்ட ஒரு திரையரங்கின் முன்பு ரசிகர் ஒன்று கூடி வெடி வெடித்து, தாரை தப்பட்டை அடித்து நடனமாடி கொண்டாடினர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ