தீபாவளிக்கு ரிலீஸாகும் மாஸ் திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

Diwali Releases 2025 Tamil Films: வரும் தீபாவளிக்கு தமிழ் திரையுலகில் 3 திரைப்படங்கள் வெளியாகின்றன. அவை என்னென்ன தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 10, 2025, 05:49 PM IST
  • தீபாவளிக்கு ரிலீஸாகும் திரைப்படங்கள்
  • ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தது..
  • என்னென்ன படங்கள் தெரியுமா?
தீபாவளிக்கு ரிலீஸாகும்  மாஸ் திரைப்படங்கள்! என்னென்ன தெரியுமா?

Diwali Releases 2025 Tamil Films: இந்திய திரையுலகை பொறுத்தவரை, தொடர் விடுமுறைகளை குறிவைத்து திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். குறிப்பாக பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய முக்கிய பண்டிகைகளின் போது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருட தீபாவளிக்கும் 3 படங்கள் வெளியாக இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?

சூர்யா 45:

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம், சூர்யா 45. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் தாெடங்கியது. இந்த படத்தில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி அவருக்கு வில்லனாக வருவதாக கூறப்படுகிறது. இந்த படம் தற்போது தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாப் நடிகராக விளங்கும் நடிகர் சூர்யா, கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவிதமான ஹிட் படங்களையும் கொடுக்காமல் இருக்கிறார் நடிகர் சூர்யா. இவருக்கு சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா திரைப்படம், கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் பெரும் தோல்வி அடைந்தது. அதன் பிறகு, மே 1ஆம் தேதிதான் ரெட்ரோ திரைப்படம் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம், நல்ல வசூலை பார்த்தது. இருப்பினும் விமர்சனங்கள் என்னவோ கலவையாகவே வந்தது. இப்போது ரசிகர்களின் கவனம் முழுக்க, சூர்யா 45 படத்தின் மீதுதான் இருக்கிறது. 

ட்யூட்:

சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம் மூலம், பெரிய ஹீரோவாக மாறிவிட்டார், பிரதீப் ரங்கநாதன். இவர் ஏற்கனவே 2022ல் நடித்திருந்த லவ் டுடே திரைப்படமும் பெரிய ஹிட்டை கொடுத்தது. இதையடுத்து அவரை வைத்து அஷ்வத் மாரிமுத்துவும் டிராகன் படத்தை எடுத்தார். இந்த படத்தை அடுத்து தொடர்ந்து LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)விலும் நடித்து வருகிறார். இவர் அடுத்து நடித்திருக்கும் படம்தான், ட்யூட்.

இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் மமிதா பைஜூ பிரதீப்பிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் கதை, இளைஞர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும், மாடர்ன் ஆன ஒரு ட்விஸ்டோடு கதை இருக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதனிடையே LIK படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 

பைசன்:

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து வரும் படம், பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருக்கிறார். இது, துருவ் விக்ரமின் 3வது படமாகும். இதற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன் என பலர் நடித்திருக்கின்றனர். இந்த படமும் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம், மகான் படத்திற்கு பிறகு நடிக்கும் படம் இதுவாகும். எனவே, இவரை பெரிய திரையில் பார்க்க அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

சர்தார் 2:

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் முதல் பாகம் 2022ல் வெளியாகியிருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மே1-ஆம் தேதி ரிலீஸாகும் 4 மரண மாஸ் திரைப்படங்கள்! எதை முதலில் பார்ப்பது?

மேலும்படிக்க | 2025ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 13 படங்கள்!! ‘இந்த’ 1 படத்திற்கு மவுசு அதிகம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News