அம்மா என அழைத்த தியா..அதிர்ச்சியில் உறைந்த வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Episode Update Of Serial Getti Melam : அம்மா என அழைத்த தியா.. அதிர்ச்சியில் உறைந்த வெற்றி.. மீனாட்சி போடும் திட்டம் - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Keerthana Devi | Last Updated : Feb 28, 2025, 02:24 PM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
அம்மா என அழைத்த தியா..அதிர்ச்சியில் உறைந்த வெற்றி - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Episode Update Of Serial Getti Melam : தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகாத்தொடர் கெட்டிமேளம்.

Add Zee News as a Preferred Source

நேற்றைய எபிசோட்: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் கல்யாணத்தை நிறுத்த வந்து அஞ்சலி பேசுவதை கேட்டு மனம் மாறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

kettimelam

இன்றைய எபிசோட் அப்டேட்: அதாவது, மகேஷ் - அஞ்சலியை மணமேடைக்கு அழைத்து வருகின்றனர். இருவருக்குமான திருமண சடங்குகள் நடக்க வெற்றி துளசியை சைட் அடித்தபடி இருக்க துளசி அவனை பார்த்து முறைக்கிறாள். 

அடுத்து மகேஷ், அஞ்சலியின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிய ஈஸ்வரமூர்த்தி கல்யாணம் தான் முடிந்து விட்டதுல, கிளம்பலாம் வாங்க என்று கூப்பிடுகிறார். வெற்றியையும் கூப்பிட வெற்றி வந்தோமா? போனோமானு இருக்க கூடாது அப்பா.. எல்லா வேலையையும் நாம் தான் செய்யணும் என்று சாப்பாடு பரிமாற தொடங்குகிறான். 
 
கல்யாண மண்டபத்தில் இருந்து வெளியேறிய கவின் அஞ்சலி கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தால் அந்த மகேஷை கொன்னுடுவேன் என்று நண்பர்களிடம் சொல்கிறான். அடுத்து வெற்றி கேமரா மேனிடம் பணத்தை கொடுத்து துளசியோட தன்னை ஜோடியாக போட்டோ எடுத்து தர சொல்கிறான். 
 
துளசியை போட்டோ எடுக்க கூப்பிட்டு அவளுக்கு தெரியாமல் வெற்றியை பின்னாடி நிற்க வைத்து போட்டோ எடுக்குகிறார்கள். ஆரம்பத்தில் இருந்து வெற்றியின் நடவடிக்கைகள் அனைத்தையும் அவனது அண்ணி மீனாட்சி கவனித்து வருகிறாள். அடுத்து சாப்பாடு பரிமாறும் போது ஒரு குழந்தை துளசியை அம்மா என கூப்பிட வெற்றி அதை கேட்டு அதிர்ச்சியும் குழப்பமும் அடைகிறான். மீனாட்சி இதையும் நோட் செய்கிறாள். 
 
இதையடுத்து மகேஷ் - அஞ்சலி மாறி மாறி சாப்பாடு ஊட்டி கொள்கின்றனர். அதே போல் சிவராமன் லக்ஷ்மிக்கு சாப்பாடு ஊட்டி விட கேசவன், ரகுராம் ஆகியோரும் தங்களது மனைவிக்கு சாப்பாடு ஊட்டி விடுகின்றனர். 
 
kettimelam
பிறகு மீனாட்சி துளசியை கூப்பிட்டு அவளை பற்றி விசாரிக்கிறாள். குழந்தை தியாவை பற்றி விசாரிக்க அது ஸ்ரீகாந்த் குழந்தை என்று விஷங்களை கேட்டறிகிறாள். இறுதியில் அத்தையோட 5 கண்டிஷன்களுக்கும் துளசி செட்டாக மாட்டா என்பதை அறியும் மீனாட்சி இவளை வெற்றிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என திட்டம் போடுகிறாள். 
 
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
 
 
 
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News