இந்தியாவின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு, அதன் விறுவிறுப்பான டாஸ்க்குகள் மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகள் ஒரு காரணம் என்றாலும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நட்சத்திரங்களின் ஆளுமையும், சம்பளமும் மற்றொரு முக்கிய காரணமாகும். தமிழில் 7 சீசன்களாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்திய பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர் என்ற பெருமையை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க | குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவர் கைது! ஏன் தெரியுமா? காரணம் இதோ..

சினிமாவை மிஞ்சும் சின்னத்திரை சம்பளம்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முகமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்பவர் சல்மான் கான். அவரது கண்டிப்பான, அதே சமயம் நகைச்சுவையான அணுகுமுறைக்காகவே, வார இறுதி எபிசோடுகளை பார்க்க ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்தி பிக் பாஸ் 19-வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக, சல்மான் கான் வாங்கும் சம்பளம் குறித்த தகவல்கள் இந்திய திரையுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த சீசனுக்காக சல்மான் கான் சுமார் ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். வாரத்தில் இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகும் வீக்கெண்ட் கா வார் எபிசோடுகள், ஒரே நாளில் படமாக்கப்படுகின்றன. இந்த ஒரு நாள் படப்பிடிப்பிற்காக, சல்மான் கான் பெறும் சம்பளம் மட்டும் சுமார் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது, அவர் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு சீசனிலும் அவரது சம்பளம் அதிகரித்து கொண்டே செல்வது, பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அவர் எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது.
தென்னிந்தியாவில் அதிக சம்பளம் யாருக்கு?
சல்மான் கானுக்கு அடுத்தபடியாக, இந்திய பிக் பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் பெற்றவர் உலக நாயகன் கமல்ஹாசன் தான். அவர், தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனை தொகுத்து வழங்க, சுமார் ரூ.130 கோடி வரை சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு பிறகு, 8வது சீசன் முதல் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமலுக்கு நிகரான அவரது இயல்பான தொகுத்து வழங்கும் பாணி, மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக, நடிகர் விஜய் சேதுபதிக்கு சுமார் ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற மொழிகளுடன் ஒப்பிடுகையில், மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மோகன்லால் ஒரு சீசனுக்கு ரூ.24 கோடியும், தெலுங்கு பிக் பாஸை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனா ரூ.30 கோடியும் சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நட்சத்திரங்கள் பெறும் இந்த மலைக்க வைக்கும் சம்பளம், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தையும், அதன் வர்த்தக மதிப்பையும் தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது. அந்த வகையில் சம்பளத்திலும், செல்வாக்கிலும் சல்மான் கான், இந்திய பிக் பாஸ் வரலாற்றில் தனி ஒருவராக திகழ்கிறார்.
மேலும் படிக்க | ஷபானாவிடம் வம்பு செய்த மாதம்பட்டி ரங்கராஜ்? நடந்தது என்ன? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









