முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யாவின் குடும்பம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 13, 2021, 06:53 AM IST
  • முதலமைச்சர் நிவாரண நிதி
  • நடிகர் சிவக்குமாரின் குடும்பம் 1 கோடி ரூபாய் நன்கொடை
  • கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நன்கொடை
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு Rs 1 கோடி கொடுத்த நடிகர் சிவக்குமாரின் குடும்பம்

சென்னை: கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யாவின் குடும்பம் ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.

பொது மக்கள், சமூக சேவை அமைப்புகள், நிதி நிறுவனங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவலாம்.

Also Read | சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் அப்டேட், தயாரிப்பாளர் அறிக்கை!

நன்கொடைகளுக்கு 100% வருமான வரி அளிக்கப்படும். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கோரிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக நிதியுதவி அளிப்பவர்களின் வசதிக்காக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு விவரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சரின் கோரிக்கையை பலரும் ஏற்று வங்கிக் கணக்கில் நன்கொடைகளை அளித்து வருகின்றனர். நடிகர் சூர்யா சிவக்குமாரின் குடும்பத்தின் சார்பில், அவர்கள் ஒரு கோடி ரூபாய் நன்கொடையை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

Also Read | கொரோனா தொற்று பாதிப்பால் கில்லி பட நடிகர் மரணம்!
 
அப்பா நடிகர் சிவக்குமார், மகன்கள் நடிகர் கார்த்தி என மூவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.

ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கு உதவியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு இந்த காசோலையை வழங்கினார்கள். நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தின் சார்பில் அளிக்கப்பட்ட நிதியை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்தார்.

நடிகர் சூர்யாவின் குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை நிவாரணமாக வழங்கியது அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இது மற்றவர்களும் கொரோனாவை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு நன்கொடைகளை கொடுக்க ஊக்குவிக்கும். சூர்யாவின் குடும்பம் 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது தொடர்பாக சமூக ஊடகங்களில் நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா, மற்றும் நடிகர் கார்த்திக்கு பாராட்டுச் செய்திகள் குவிந்து வருகின்றன.

Also Read | இன்றைய ராசிபலன், 13 மே 2021: சுபச்செய்திகள் கிடைக்கும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News