வசூல் மழையில் டிராகன்! பிரதீப்பிடம் தோற்ற தனுஷ்.. NEEK-ன் நிலைமை என்ன?

Dragon vs NEEK: டிராகன் படத்துடன் திரையரங்கில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று மண்ணை கவ்வி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Mar 5, 2025, 02:23 PM IST
  • கடந்த பிப். 21ஆம் தேதி டிராகன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படங்கள் வெளியானது
  • டிராகன் படம் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், தனுஷின் NEEK படம் சோதப்பி உள்ளது
வசூல் மழையில் டிராகன்! பிரதீப்பிடம் தோற்ற தனுஷ்.. NEEK-ன் நிலைமை என்ன?

கோமாளி படத்தை இயக்கியத்தன் மூலம் இயக்குநராக எண்டிரி கொடுத்த பிரதீப் ரங்கநாதன், அவரது இயக்கத்தில் அவரே நடித்து வெளியான லவ் டுடே படத்தின் மூலம் மக்கள் இடையே பிரபலமானார். இவரது காமெடி கலந்த திரைப்படங்கள் இவருக்கு மக்கள் மனத்தில் நல்ல பெயரை பெற்று தந்தது. 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் டிராகன். ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக மாறிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி உள்ளார். காமெடியாக படத்தை இயக்கி இருந்தாலும், படிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை மிக அழகாக சொல்லி இருக்கிறார். 

இந்நிலையில், இப்படம் வெளியான 10 நாளில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஆனால் இப்படத்துடன் சேர்ந்து வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோவம் நல்ல வரவேற்பை பெறவில்லை. மோசமான விமர்சனங்களை பெற்று மண்ணை கவ்வியது. +

மேலும் படிங்க: நயன்தாரா மட்டுமில்லை! லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்ட 4 இந்திய நடிகைகள்..

 

டிராகன் பட வசூல் 

பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான இப்படம் 10 நாட்களில் 100 வசூலை தாண்டி சாதனை படைத்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 

மண்ணை கவ்விய தனுஷ் படம்

தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்துடன் வெளியானது. இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயணன், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கோல்டன் ஸ்பரோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதால் படமும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இப்படம் 10 நாளில் வெறும் 8 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. டிராகன் படம் நன்றாக இருப்பதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் மிக மோசமான அடியை வாங்கி உள்ளது.  

மேலும் படிங்க: பிரபல நடிகை ரன்யா ராவ் 14 கிலோ தங்கம் க‌டத்தியதாக விமான நிலையத்தில் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News