Dragon Movie Box Office: சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படம் கடந்த பிப்.21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
படிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை யதார்த்தமாக எடுத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து. பிரதீப் ரங்கநாதனும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். உலகளவில் இப்படம் இதுவரை ரூ.94 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில், அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் வசூலை டிராகன் திரைப்படம் முறியடித்துள்ளது. அதாவது வட அமெரிக்காவில் மட்டுமே $950k+ வசூல் செய்துள்ளது. இதன்மூலம் வட அமெரிக்காவில் மட்டும் விடாமுயற்சி படத்தின் வசூல் சாதனையை டிராகன் திரைப்படம் முறியடித்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிங்க: ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஒரு பிரபலமான பழைய பாடல்! எது தெரியுமா?
கடந்த 8 நாட்களில் செய்த வசூல்
டிராகன் திரைப்படம் இறங்கி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது 8 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம்.
அதன்படி கடந்த 8 நாட்களில் டிராகன் திரைப்படம் உலகளவில் ரூ.85 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: டிராகன் பட நாயகி குறித்து யாரும் அறியாத விஷயம்..யார் இந்த கயாடு லோகர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









