Kayadu Lohar Wants To Act With Vijay : நடிகர் விஜய் உடன் இணைந்து நடிக்க ஆசை என நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் டிராகன் பட நாயகி கையாடு லோஹர் பேச்சு
கல்லூரி விழாவில் கயாடு லோஹர்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 25-ம் ஆண்டு ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் நடித்த கதாநாயகி கையாடு லோகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் .

மேலும் சின்னத்திரை நடிகர்கள் கீர்த்தி, விஜய் , சின்னத்திரை பாடகர்கள் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பிரியா ஜெர்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கூடியிருந்த மாணவ மாணவியர் மத்தியில் பேசிய கையாடு லோகர் தமிழ் சினிமாவில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் விஜய் உடன் நடிக்க விரும்புவதாக தெரிவித்தார் . மேலும் நடிகர் சிம்பு சாதாரண நடிகர் இல்லை எனவும், அவருக்கு நடிப்பில் பல பரிமாண முகங்கள் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் கூடி இருந்தம் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் மத்தியில் நடந்து சென்று அவர்களிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் இதனை அடுத்து நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடனமாடி தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தினர். மேலும் பாடகர்கள் அர்விந்த் ஸ்ரீனிவாஸ், பிரியா உள்ளிட்டோருடன் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களும் உற்சாகமாக பாடல்களை பாடினர். இதனையடுத்து கூடியிருந்த மாணவ மாணவியர் ‘கோடான கோடி’ என்ற பாடலுக்கு உற்சாகமடைந்து பாடலுக்கு ஏற்ப நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் படிக்க | சிம்புவின் அடுத்த படத்தில் 2 ஹாட் நாயகிகள்! இவங்கள பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..
மேலும் படிக்க | டிராகன் பட நாயகி குறித்து யாரும் அறியாத விஷயம்..யார் இந்த கயாடு லோகர்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ