Draupathi 2 Emkoney Song Controversy : இயக்குனர் மோகன் ஜி இயக்கிய திரௌபதி 2 படத்தில் தான் பாடிய பாடலுக்காக பாடகி சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் குறித்து மோகன் ஜி பேசியது என்ன என்பதையும், பேரரசு கொடுத்துள்ள ரிப்ளை என்ன என்பதையும் காணலாம்.
திரெளபதி 2 :
இயக்குனர் மோகன் ஜி பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அதோடு சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் மோகன் ஜி சமூக வலைதளத்தில் போஸ்ட் போட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தன்னுடைய படங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மத்தை கொட்டுகிறார் என்று இவர் மீது விமர்சனங்களும் உள்ளன. தன்னுடைய சொந்த சாதியை தூக்கிப்பிடித்து இவர் படமெடுக்கிறார் என்ற பெயரும் இவருக்கு உள்ளது. தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு அடிக்கடி பதில் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் திரௌபதி 2 படத்தை இயக்கி இருக்கிறார்.
சின்மயி பாடிய பாடல்:
அந்த படத்தில் திரௌபதி படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் "எம்கானோ" என்கிற பாடல் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் இப்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடலை பாடகி சின்மயி பாடியுள்ளார்.
இந்நிலையில் பெண் சுதந்திரம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தட்டிக்கேட்கும் சின்மயி, சுயசாதி பெருமை பேசி திரைப்படங்களை எடுக்கும் இயக்குநர் மோகன் ஜி படத்தில் பாடியது ஏன் என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
மன்னிப்பு கேட்ட சின்மயி:
சின்மயி இந்த பாடலை பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது எக்ஸ் தளத்தில் போஸ்ட் போட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவில், ”ஜிப்ரானை எனக்கு பல வருடங்களாக தெரியும். அவர் ஸ்டுடியோவில் இருந்து என்னை பாட அழைத்த போது அங்கு சென்று பாடிவிட்டு வந்துவிட்டேன். அப்போது அங்கு ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் அந்த பாடலை பாடி இருக்க மாட்டேன். அந்த கொள்கைக்கும் எனக்கும் நிறைய முரண்பாடு உள்ளது, இதுதான் உண்மை ”என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் சின்மயி பதிவிட்டு இருக்கிறார்.
சின்மயி இப்படி பதிவிட்டதும் மோகன் ஜி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் என்னுடன் திரௌபதி 2-ம் பாகம் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறி வைத்து தாக்க வேண்டாம். திரௌபதி 2 படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறி வைத்து தாக்குவது கோழைத்தனம் ஆகும் என்று கூறி இருக்கிறார். திரௌபதி 2-வில் பாடியதற்காக சின்மயி மன்னிப்பு கேட்டதால் இவர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
பேரரசு கொடுத்த பதில்:
சின்மயின் இந்த பதிவு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் பேரரசு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில்,இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல சின்மயி அவர்களே, பாடுவதற்காக வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்துவிட்டு உங்கள் குரலை நீக்கிவிடச் சொல்லலாம். கொள்கையை விட பணமா முக்கியம்? இயக்குனர் மோகன் ஜி அவர்கள் வேறு ஒரு குரலை பதிவு செய்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது என பதிவிட்டுள்ளார்.இப்படி இந்த சர்ச்சை பூதாகரமாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









