ED Raid at Dulquer Salmaan House: தென்னிந்திய திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மற்றும் அவரது மகனும், முன்னணி நடிகருமான துல்கர் சல்மானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சென்னை மற்றும் கொச்சியில் உள்ள அவர்களது வீடுகள், அலுவலகங்கள் உட்பட சுமார் 17-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோதனையின் பின்னணி என்ன?
பூட்டான் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கார்களை இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சுங்கத்துறை முன்னதாக நடத்திய ஆபரேஷன் நுங்கோர் என்ற பெயரிலான விசாரணையின் தொடர்ச்சியாகவே, அமலாக்கத்துறை தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
இந்த ஆபரேஷன் நுங்கோர் விசாரணையின் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பல கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில், நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான சில கார்களும் அடங்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில், சமீபத்தில் கேரள உயர் நீதிமன்றம், துல்கர் சல்மானுக்கு சொந்தமான வாகனங்களை விடுவிப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்குமாறு சுங்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், முறையான ஆதாரங்கள் இல்லாமல் தனிநபர்கள் மீது குற்றம் சாட்டுவது சரி இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்த சூழலில், தற்போது அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்து, பண மோசடி கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் கொச்சியில் தீவிர சோதனை
இன்று காலை முதல், கொச்சியில் உள்ள மம்மூட்டியின் வீடு மற்றும் துல்கர் சல்மானின் 'வேஃபேரர் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகிறது. அதே சமயம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மம்மூட்டிக்கு சொந்தமான இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
திரையுலகில் பெரும் பரபரப்பு
மம்மூட்டி மற்றும் துல்கர் சல்மான் இருவரும் மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள். துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் நிறுவனம், பல வெற்றி படங்களைத் தயாரித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தென்னிந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் திரை நட்சத்திரங்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது, ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனை குறித்த செய்தி வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் இது குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையின் பின்னணி குறித்தும், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | காந்தாரா சாப்ட்டர் 1 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









