‘எதிர்நீச்சல்’ தொடர் புகழ் மாரிமுத்து உயிரிழந்துள்ளதை அடுத்து அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயிலர் படத்தில் மாரிமுத்து..


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், படம் முழுவதும் நெகடிவ் ரோலில் வரும் கேரக்டர் இவருடையது. பன்னீர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதை அடுத்து திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..


மாரிமுத்துவின் உயிரிழப்பிற்கு இரங்கல் பதிவு வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்” என்று அவர் குறித்து குறிப்பிட்டிருக்கிறார். 



மேலும், அவருடைய இறப்பு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகவும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தான் மனமார்ந்த அஞ்சலியை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். ரஜினிகாந்த் விரும்பி பார்க்கும் தொடர்களுள் ஒன்று எதிர்நீச்சல் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!


நெல்சன் பதிவு..


ரஜினிகாந்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், மாரிமுத்துவின் இறப்பு தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். 



“உங்களுடன் இருந்த தருணங்களை நினைத்து பார்க்கிறேன்..” என்று தனது பதிவில் நெல்சன் திலீப்குமார் குறிப்பிட்டுள்ளார். 


உதயநிதி ஸ்டாலின் பதிவு..


தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாரிமுத்துவிற்கு ட்விட்டரில் இரங்கல் செய்தியினை தெரிவித்துள்ளார். அதில், அண்ணன் மாரிமுத்துவின் மரணம் தனக்கு அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிப்பதாக கூறியுள்ளார். 



அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு தான் ஆறுதலை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


 


மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்..


நடிகர் மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவருடன் இணைந்து நடிக்கும் கபிலேஷ் தெரிவித்திருந்தார். எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுக்கு தம்பியாக நடித்து வரும் கமலேஷ் மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது நெஞ்சு வலிப்பதாகவும், வெளியே சென்று காற்று வாங்கிவிட்டு வருவதாகவும் கூறிச் சென்றுள்ளார் மாரிமுத்து. அதற்குள் அவர் மயங்கிவிழ அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது எல்லாமே வெறும் 10 நிமிடத்துக்குள் நடந்துமுடிந்துள்ளது தான் வேதனை.


ரசிகர்கள் அதிர்ச்சி..


எதிர்நீச்சல் தொடரில் சில எபிசோடுகளுக்கு முன்னதாக மாரிமுத்துவின் கதாப்பாத்திரமான ஆதி குணசேகரனுக்கு நெஞ்சு வலி வருவது பாேன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இப்போது அவருக்கு உண்மையாகவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து, நெஞ்சுவலி காட்சியின் போது மாரிமுத்து பேசிய டைலாக்குளை வீடியோவாக ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். இனி அவரை தொடரில் பார்க்கும் போது அவர் செய்யும் காமெடி கூட சோகமாகத்தான் தெரியும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | மாரிமுத்துவின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? எதிர்நீச்சல் தொடர் நடிகர் விளக்கம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ