Retro Song In Good Bad Ugly : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், குட் பேட் அக்லி. இந்த படத்தில், அஜித்குமார் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு பழைய பாடல் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
புது படத்தில் பழைய பாடல்:
தற்போது வெளிவரும் பல படங்களில், பழைய படங்களின் பாடல்கள் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த பாடல்கள், அதன் பிறகு ட்ரெண்டாகி இணையத்தில் வைரலாவதும் வழக்கம். இது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில், தி கோட் படத்தில் கூட “சொர்க்கமே என்றாலும்..” இளையராஜா பாடல் இடம் பெற்றிருக்கும். இது போல குட் பேட் அக்லி திரைப்படத்திலும் இது போல ஒரு ரெட்ரோ பாடல் இடம் பெற இருக்கிறது. அது என்ன பாடல் தெரியுமா?
என்ன பாடல்?
குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற இருக்கும் பாடல் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த பாடல், 1999ஆம் ஆண்டு வெளியான எதிரும் புதிரும் படத்தில் இடம் பெற்றிருந்த பாடலாகும். மம்மூட்டி, நெப்போலியன், நாசர், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படத்தில் வரும் அந்த பாடல் பலரை நடனமாட வைத்திருக்கிறது. இந்த படத்திற்கு இசையமைத்தது, வித்தியாசாகர்.
“தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..” என வரும் அந்த பாடலில், நடன இயக்குனரும், நடிகரும், பிரபு தேவாவின் சகோதரருமான ராஜு சுந்தரம் நடனமாடியிருப்பார். இவருடன் சேர்ந்து, நடிகை சிம்ரனும் நடனமாடியிருப்பார். இவர்கள் இருவரும் ஒரு பாடலுக்காக மட்டும் கேமியாே கேரக்டரில் வந்து நடனமாடியிருப்பர். தற்போது இந்த பாடலை, இப்போதையை இசையில் ஜி.வி.பிரகாஷ் குமார் கொஞ்சம் மெட்டுகளை மாற்றி அமைத்து உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

அசர வைத்த டீசர்:
குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சுமார் 1:30 நிமிடங்கள் வரை இருந்த இந்த டீசர், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாலியான கேங்க்ஸ்டராக நடித்திருக்கிறார்.
குட்- ஒரு நல்லவர், பேட் - கொஞ்சம் கெட்டவர், அக்லி - ரொம்ப கெட்டவர் என மூன்று தோற்றங்களில் அஜித் நடித்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், பிஜிஎம் என அனைத்தும் மாஸாக இருப்பதால் அவரது ரசிகர்கள் அனைவரும் படு குஷியில் இருக்கின்றனர்.
கைவிட்ட விடாமுயற்சி-கை கொடுக்குமா GBU?
அஜித்குமார் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வந்த விடாமுயற்சி, 2 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் வெளியான படமாகும். பெரிய எதிர்பார்ப்புகளுக்கு பின்பு வெளியான இந்த படம், ரசிகர்களை பெரிய அளவில் ஏமாற்றியது. இது, அஜித்திற்கு ஏற்ற திரைப்படம் இல்லை என்றும் பலர் விமர்சனத்தில கூறியிருந்தனர். இப்படி, அஜித்தை விடாமுயற்சி திரைப்படம் அஜித்தை கைவிட்ட நிலையில், அடுத்த குட் பேட் அக்லி படமாவது அவருக்கு கைக்கொடுக்க வேண்டும் என பலர் கூறி வருகின்றனர். அஜித், இந்த படத்திற்கு பிறகு தனது கார் ரேஸிங் கெரியரில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | 1 படத்தில் 9 படங்களின் குறியீடு! குட் பேட் அக்லி டீசரில் இதை கவனிச்சீங்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









