Jailer 2 Update: 'ஜெயிலர் 2' படத்தில் இணைந்த பிரபலம்!

Jailer 2 Update: இயக்குநர் நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. 

Written by - R Balaji | Last Updated : Mar 17, 2025, 10:19 PM IST
  • ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வருகிறது
  • தற்போது அப்படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார்
Jailer 2 Update: 'ஜெயிலர் 2' படத்தில் இணைந்த பிரபலம்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில், ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தனர். மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 

Add Zee News as a Preferred Source

இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இரண்டாம் பாகம் அறிவிப்பு தொடர்பான வீடியோவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த ஆக்‌ஷன் திரைப்படத்தை எடுப்பதுதான் நெல்சனின் பாணி. அப்படி உருவானதுதான் ஜெயிலர் படமும். இந்த நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

மேலும் படிங்க: கிளாமர் லுக்கில் கலக்கும் ரித்திகா சிங்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த கூலி படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும், இனி அவர் முழு நேரமாக ஜெயிலர் 2-வில் நடிக்க தொடங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபலங்களை கொண்டு ஜெயிலர் படம் உருவாகி மிகப்பெரிய ஹிட்டானது. தற்போது, ஜெயிலர் 2 படத்திலும் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி, ஜெயிலர் 2 படத்தில் படப்பிடிப்பில் பிரபல நடிகரான எஸ். ஜே. சூர்யா இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் எஸ். ஜே. சூர்யா வில்லனாக பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினியுடன் நடிக்க உள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும், வரும் மார்ச் 27ஆம் தேதி வீர தீர சூரன் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் எஸ். ஜே. சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல்! தீயாய் இருக்கும் OG Sambavam ப்ரமோ வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News