வெற்றிமாறன் படத்தில் 2 ஹீரோக்கள்! ஒன்னு சிம்பு..இன்னொன்னு யார் தெரியுமா?

Manikandan Play Role In Simbu Vetrimaaran Movie : வெற்றிமாறன் இயக்க இருக்கும் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து இன்னொரு ஹீரோ நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த இன்னொரு ஹீரோ யார் என்று தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2025, 05:09 PM IST
  • சிம்பு X வெற்றிமாறன் படம்
  • உடன் நடிக்கும் இன்னொரு ஹீரோ
  • யார் தெரியுமா?
வெற்றிமாறன் படத்தில் 2 ஹீரோக்கள்! ஒன்னு சிம்பு..இன்னொன்னு யார் தெரியுமா?

Manikandan Play Role In Simbu Vetrimaaran Movie : கோலிவுட் திரையுலகில் டாப் இயக்குநராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் தற்போது சிலம்பரசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் சேர்ந்து இன்னொரு நடிகரும் நடிக்கிறாராம்.

Add Zee News as a Preferred Source

சிம்பு-வெற்றிமாறன் இணையும் படம்!

பிறந்தவுடன் சினிமாவிற்குள் வந்து, வளர்ந்து, இப்போது பெரிய இடத்தை பெற்றிருப்பவர் சிலம்பரசன். இளமை காலத்தில் இவர் ஹீரோவாக நடித்திருந்த படங்கள், பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. ஆனால், சில காரணங்களால் இவருக்கு தமிழ் சினிமாவில் ரெட் கார்டு கொடுக்கப்பட, வீட்டிலேயே இருந்த அவர் உடல் எடை கூடினார். இது அவர் திரையுலகில் மீண்டும் நடிக்க வந்த போது பெரிய தடையாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் உடைத்தெரிந்து மாநாடு படம் மூலம் ஹிட் கொடுத்து, கம்-பேக் தந்தார். இதையடுத்து, சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தின் ஹைலைட்டாக இருந்தது இவரது ஸ்கிரீன் பிரசென்ஸ்தான் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் வெற்றிமாறனும் சிம்புவம் ஒரு படத்தில் இணைவதாக கூறப்பட்டது. அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கூட இணையத்தில் வைரலானது.

இன்னொரு ஹீரோ யார்?

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தில், அவருடன் சேர்ந்து இன்னொரு ஹீரோ நடிகரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறாராம். அவர் வேறு யாருமில்லை, நம்ம ‘குட் நைட்’ பட மணிகண்டன்தான். சின்னத்திரையில் தோன்றி, ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு, துணை கதாப்பாத்திரமாக நடித்து, இப்போது வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கிறார். இவர், மத்தகம் தொடரில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். அது போல, இந்த படத்திலும் அவருக்கு வலுவான தோற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Manikandan

கதை என்ன?

இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வியே சந்திக்காத இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார் வெற்றிமாறன். எப்பாேதும் கத்தி-கொலை-வெட்டு-குத்து என க்ரைம் படங்களை மட்டுமே எடுத்து வரும் வெற்றி, தனக்கு ஃபேவரட்டாக சில நடிகர்களை வைத்துள்ளார். அவர்களை வைத்துதான் பெரும்பாலும் படங்களை எடுப்பார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஹீரோக்களை தேர்ந்தெடுக்கும் விதத்தில் புதுமை காட்டி வரும் அவர் சூரியை விடுதலை படத்தில் நாயகனாக்கினார். அதைத்தொடர்ந்து, தற்பாேது முதன்முறையாக நடிகர் சிலம்பரசனுடன் கைக்கோர்த்துள்ளார்.

சிம்புவும் வெற்றிமாறனும் இணையும் இந்த படம், வட சென்னையை சார்ந்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் “இது வட சென்னை இரண்டாம் பாகமா?” என்று கேட்டு வந்தனர். ஆனால், அதற்கு விளக்கமளித்த அவர், வட சென்னை கதையின் உரிமையாளர் தனுஷ்தான் என்றும், தான் இப்போது எடுத்து வரும் கதை வட சென்னையை சார்ந்தது ஆனால் வட சென்னை இரண்டாம் பாகம் இல்லை என்றும் தெரிவித்தார்.

இரட்டை வேடத்தில் சிம்பு..?

நடிகர் சிம்பு இதற்கு முன்னர், மன்மதன், சிலம்பாட்டம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இப்போது, நான்காவது முறையாக வெற்றிமாறனின் படத்திலும் இரண்டு தோற்றத்தில் வர இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தோற்றம் இளமையாகவும் இன்னொரு தோற்றம் முதுமையாகவும் இருக்குமாம். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்ல.

மேலும் படிக்க | சிம்பு X வெற்றிமாறன் படத்தின் டைட்டில் இதுதான்! லீக் ஆன தகவல்..

மேலும் படிக்க | படத்தை ஹிட் ஆக்க..பழைய முயற்சியை கையில் எடுத்த சிம்பு! என்ன செய்கிறார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News