First Choice To Play Ganga In Chandramukhi : சமீப காலமாக கோலிவுட்டில் வெளியாகும் சில படங்கள், வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு அகற்றப்படுகின்றன. ஆனால் எத்தனை காலங்கள் ஆனாலும் ஒரு சில திரைப்படங்கள், கிளாசிக் ஹிட்டாக நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்று, சந்திரமுகி. இந்த படத்தில் ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அவருக்கு பதில் அளிக்க இருந்தவர் யார் தெரியுமா?
சந்திரமுகி திரைப்படம்:
பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி படம் வெளியானது. மலையாளத்தில் ரிலீஸ் ஆகிவிட்டான மணிசித்திரத்தாழு என்ற படத்தில் தமிழ் ரீ-மேக்தான் இது. இந்த படத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருப்பார். நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். பிரபு, கே.ஆர். விஜயா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தனர். இத்தனை பேர் நடித்திருந்தாலும், இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது ஜோதிகாவின் கங்கா/சந்திரமுகி கதாபாத்திரத்திற்குதான்.
குறும் பெண்ணாக இருக்கும் கங்காவிற்குள், சந்திரமுகி எனும் கதாபாத்திரம் ஆட்கொள்வதை, மல்டிபிள் பர்சனாலிட்டி டிசார்டர் எனும் உளவியல் ரீதியான பிரச்சனையாக காண்பித்திருப்பர். ஜோதிகா, தனக்கு அளிக்கப்பட்ட இரண்டு கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக நடித்துக் கொடுத்திருப்பார். இன்று வரை அந்த சந்திரமுகி கதாபாத்திரத்தில், இவரைத் தவிர வேறு யாரையும் வைத்து பார்க்க இயலாது. ஆனால், இதில் ஜோதிகாவிற்கு முன் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
யார் அந்த நடிகை?
சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தது வேறு யாரும் கிடையாது, நடிகை சிம்ரன்தான். 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை சிம்ரன், அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டே வந்தார். அப்போதுதான் அவருக்கு சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கேரக்டர் படி, அவர் நிறைய நடனம் ஆட வேண்டும் என்பதால், அது தனக்கு ஒத்து வராது என்று இதனை ரிஜிப் செய்துவிட்டாராம்.

சிம்ரனுக்கு பிறகு சதா, ரீமா சென், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலருக்கும் இந்த வாய்ப்பு சென்றது. ஆனால் யாருமே இதில் நடிக்க முன்வரவில்லை. இறுதியில் ஜோதிகாதான் இந்த பாத்திரத்தில் நடித்தார்.
ரசிகர்களை கடுப்பாக்கிய சந்திரமுகி 2!
எந்தவொரு நல்ல படம் வெளியானாலும், அதை அப்படியே விட்டுவிடாமல், அதற்கு 2ஆம் பாகம் எடுத்து, நல்ல படத்தை கெடுப்பதே நம் ஊர் ஆட்களுக்கு வேலையாகி போய்விட்டது. அப்படி, ரசிகர்களை கடுப்பாக்கிய படம், சந்திரமுகி 2. இதில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். முதல் படத்தில், சந்திரமுகி கதாப்பாத்திரத்திற்கு சைக்கலாஜிக்கல் பிம்பம் கொடுத்து விட்டு, இந்த பாகத்தில் அதனை பேயாக மாற்றி விட்டனர்.
என்னதான், வடிவேலு, ராதிகா, ராகவா லாரன்ஸ், லக்ஷமி மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் தற்போதைய ட்ரெண்டுக்கு ஏற்றது போல இல்லை என்றும், முதல் பாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வெளியானதாகவும் படத்தை பார்த்தவர்கள் விமர்சனங்களை தெரிவித்தனர். அது மட்டுமன்றி, தயவு செய்து இதற்கு மேல் வேறு எந்த பாகத்தையும் எடுக்க வேண்டாம் எனவும் பி.வாசுவிடம் வேண்டுகோள் வைத்தனர்.
மேலும் படிக்க | கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ‘இவர்’ நடிக்க வேண்டியது!! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









