5 நிமிட பாடலுக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை! யாரு தெரியுமா?

Famous Actress Got 5 Crores For A Song : ஒரு நடிகை, 5 நிமிட பாடலுக்கு நடனமாட ரூ.5 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறாராம். அவர் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 13, 2025, 11:55 AM IST
  • 5 நிமிட பாடலுக்கு 5 கோடி ரூபாய்..
  • தொடர்ந்து ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்..
  • யார் தெரியுமா?
5 நிமிட பாடலுக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை! யாரு தெரியுமா?

Famous Actress Got 5 Crores For A Song : தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக விளங்கும் ஒருவர், ஒரு பாடலுக்கு நடனமாட ரூ.5 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் என்பதையும், எந்த படத்திற்காக அவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பதையும் இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

5 நிமிட பாடலுக்கு..5 கோடி சம்பளம்..

35 வயதாகும் இந்த நடிகை, தமிழிலும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஜய், அஜித், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டிருப்பவர் இந்த நடிகை. இவர், வட இந்தியாவை சேர்ந்த நடிகையாக இருந்தாலும், தென்னிந்தியாவில்தான் இவரது மார்கெட் உச்சத்தில் இருந்தது. இப்போது அவருக்கு இந்தியில் அதிக படங்களில் நடிக்க  வாய்ப்பு கிடைத்து விட்டதால், தொடர்ந்து பாலிவுட்டில் காலூன்றி வருகிறார். 

அந்த நடிகை வேறு யாருமில்லை, நடிகை தமன்னாதான். பாலிவுட்டில், தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ரெய்டு 2. இந்த படத்தில், நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். இந்த 5 நிமிட பாடலுக்கு நடிகை தமன்னா, ரூ.5 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

Tammannah

தொடர்ந்து பல படங்களுக்கு கவர்ச்சி நடனம்..

நடிகை தமன்னா, கடந்த சில ஆண்டுகளாகவே, பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார். உதாரணத்திற்கு, 2023-ல் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ‘காவாலா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடியிருந்தார். இதுவே, இவருக்கு பல படங்களில் நடனமாட அடித்தளம் போட்டு கொடுத்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு வெளியான பாலிவுட் படம் ‘ஸ்ட்ரீ 2’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஆஜ் கி ராத்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். வேதா எனும் படத்திலும் நடனமாடியிருந்தார். இப்படி, தமன்னா பாடல்களுக்கு மட்டும் நடனமாடுவதற்கும் ரசிகர்கள் வரவேற்பை கொடுத்துள்ளனர்.

அடுத்து நடிக்கும் படம்..

நடிகை தமன்னா, தற்போது சிங்கிள் ஹீரோயின் சப்ஜெக்டிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த அரண்மனை 4 திரைப்படம் வெற்றியை தேடித்தந்ததது. இந்த படத்திற்கு பின்னர், தற்போது ஓடெல்லா 2 எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில், அவர் ‘சிவ சக்தி’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது குறித்த டிரைலர் சமீபத்தில் வெளியானது.
சர்ச்சையில் சிக்கினார்..

நடிகை தமன்னா நடித்த ஓடெல்லா 2 திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், “மாட்டின் கோமியத்தை வேண்டுமானால் பிடித்து விற்கலாம். ஆனால் மாட்டின் மாமிசத்தை விற்றுதான் காசு சம்பாதிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை” என்ற டைலாக் இடம் பெற்றிருந்தது. இது வட இந்தியாவில் வரவேற்பை பெற்றாலும், தமிழகம் உள்ளிட் சில இடங்களில் சர்ச்சையை கிளப்பியது.

பிரேக்-அப்:

தமன்னா, கடந்த சில ஆண்டுகளாக இந்தி நடிகர் விஜய் வர்மாவை டேட்டிங் செய்து வந்தார். இந்த காதல் திருமணத்தில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் பிரேக்-அப்பில் முடிந்தது. திருமணம் குறித்த பேச்சுவார்த்தையால் பிரச்சனை வந்ததாகவும், இதனால் இவர்கள் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்.. யார் தெரியுமா?

மேலும் படிக்க | 2 வருடத்தில் 3000 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News