Famous Bollywood Actor To Join Jailer 2 Movie : தனது 75 வயதிலும் தமிழ் திரையுலகில் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அடுத்து ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்திலும் ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 படத்தில் பாலிவுட் நடிகர்?
கூலி படத்தை முடித்த கையோடு, நடிகர் ரஜினி ஜெயிலர் 2 படத்தில் இணைய இருக்கிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள இந்த படத்தின் வேலைகளும் தொடங்க இருக்கிறது.
முதல் பாகத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன்னாவும் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்து நடனம் ஆடியிருந்தார். தற்போது, 2ஆம் பாகம் உருவாக உள்ள நிலையில், ஒரு பிரபல பாலிவுட் நடிகர் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?
யார் அவர்?
கூலி படத்தில் அமீர்கான் போல, ஜெயிலர் 2 படத்திலும் ஷாருக்கான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷாருக்கான் இனி கேமியோ கதாப்பாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார். இதனால், அவர் இதில் நடிக்க மாட்டார் என்று கன்ஃபார் செய்யப்பட்டு விட்டது. இதை தவிர, வேறு ஒரு நடிகரின் பெயரும் இதில் அடிபடுகிறது. இது, சன்னி டியோலாக இருக்குமோ என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவரை, ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக களமிறக்க நெல்சன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் ஷூட்டிங் தொடக்கம்!
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறதாம். அடுத்த வாரம், சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 14 நாட்களில் முடியும் என கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு, கேரளாவில் அடுத்த மாதம் தொடங்குமாம். இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி படத்தில் அமீர்கான்:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில உருவாகி வருகிறது, கூலி திரைப்படம். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அவரது பெயர் தேவா. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சேர்த்து, ரஜினியுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சத்யராஜும் கைக்கோர்க்கிறார். கன்னட நடிகர் உப்பேந்திரா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள நடிகர் செளபின் சாஹிர் உள்ளிட்டோரும் இதில் நடித்து வருகின்றனர். இதில் எதிர்பாராத ஒரு பாலிவுட் நடிகரும் இருக்கிறார். அவர்தான், பாலிவுட் நடிகர் அமீர்கான். இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. கூலி படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைப்பெற்றது. இதையடுத்து, படத்தை விரைவில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தின் வில்லன் இவர்தான்!! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்..
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல நடிகை!! ரஜினியை விட 40 வயது இளையவர்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









