)
Ishari Ganesh Expensive Gift To Daughter Wedding : தமிழ் திரையுலகில் பிரபலமான மற்றும் வெற்றி பெற்ற தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் இருப்பவர் ஐசரி கணேஷ். இவரது மகள் திருமணம், சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடந்தது. இதில், தன் மகளுக்கு கொடுத்திருக்கும் திருமண பரிசு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐசரி கணேஷ் மகள் திருமணம்:
LKG, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு, கோமாளி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர், ஐசரி கணேஷ். இவர், தமிழ் நாட்டை சேர்ந்த பெரும் தொழிலதிபர்களுள் ஒருவர். வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான இவர், இனி வரும் நாட்களில் கூட, திரையுலகிற்கு புதிதாக வரும் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறார்.
ஐசரி கணேஷிற்கு பிரீத்தா என்கிற மகள் இருக்கிறார். இவரும் தந்தையின் நிறுவனத்திலும், சினிமா தயாரிப்பு பணிகளிலும் முக்கிய பொருப்பாளராக இருக்கிறார். இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஷாலினி, வெற்றிமாறன், மாரி செல்வராஜ், சத்யராஜ், மணிரத்னம், ரவி மோகன்-கெனிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மாண்டமான விருந்து..
ஐசரி கணேஷின் மகள் திருமண வரவேற்பில் மட்டும், சுமார் 25,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் பொது மக்களுக்கும் ஒரே மாதிரியான விருந்தும், மரியாதையும் வழங்கப்பட்டது. பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு நடந்த இந்த திருமணம், ஊரையே வாய் பிளக்க வைத்தது. தொடர்ந்து, மாலத்தீவில் பெரிய அளவில் திருமண வரவேற்பும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஏராளமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மகளுக்கு கொடுத்த பரிசு..
ஐசரி கணேஷ், தனது மகளுக்கு என்னென்ன சீர்வரிசை கொடுத்திருக்கிறார் என்பது பற்றிய விவரங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் தன் மகளுக்கு ஆயிரம் சவரன் தங்க நகை, பல கோடி ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. கூடவே, அவர் தனது மகளுக்கும் மருமகனுக்கும் கொடுத்திருக்கும் பரிசு குறித்தும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனது மகள் பிரீத்தாவிற்கு கொடுத்திருக்கும் பரிசு, பிரம்மாண்டமான வீடாம். இந்த வீட்டை அவர் சென்னை ஈசிஆரில் பெரிய அளவில் அந்த பீச் ஹவுஸை கட்டியிருப்பதாகவும், இதற்காக பல கோடி ரூபாயை செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டில், மாடியில் நீச்சல் குளம், பெரிய தோட்டம், பூங்கா, வீட்டிற்குள்ளேயே மினி தியேட்டர் என பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளதாம். இந்த வீட்டில், தனது மகளையும் மருமகனையும் விரைவில் அவர் குடியேற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள், இணையத்தில் திரையுலகை சேர்ந்தவர்களால் பேசப்பட்டு வருவதுதான் என்பதும், இதை உறுதி படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ