)
Cinema Celebrities Reactions For RCB Win : விறுவிறுப்பாக நடந்து முடிந்த ஐபிஎல் 2025 தொடரில், ஒரு வழியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கப் அடித்திருக்கிறது. இதனை, பிரபலங்கள் பலர் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். இதில் சிலர் வெறித்தனமான RCB ரசிகர்களாகவும் இருக்கின்றனர்.
RCB vs PBKS போட்டி:
ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை ஐபிஎல் இறுதிப்போட்டியில் எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், பெங்களூரு அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
18 வருடங்கள் கழித்து..
ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008ஆம் ஆண்டில் இருந்து, கடந்த 2024ஆம் ஆண்டு வரை, “கோப்பை RCBக்கு மட்டும் கிடைக்க கூடாது” என்கிற சாபம் அவர்களை 18 ஆண்டுகளாக தொடர்ந்தது. விராட் கோலிக்காகவாவது, இந்த வருடம் கண்டிப்பாக கப்பை வென்று விட வேண்டும் என்று இந்த அணி நினைத்ததோ என்னவோ, வெறித்தனமாக விளையாடி கடைசியில் கோப்பையை வென்று விட்டனர்.
எப்போதும், சீசன் ஆரம்பித்த நாளில் இருந்து ஆர்சிபி-யின் ரசிகர்கள் ரொம்ப பேசி கடைசியில் வாங்கிக்கட்டிக்கொள்வர். ஆனால், இந்த வருடம் அவர்கள் கொஞ்சம் அடக்கி வாசித்ததால்தான், RCB இம்முறை கோப்பையை வென்றுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் மட்டும் அல்லாது இந்திய அளவில் RCB அணிக்கு பல காேடி ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களில், சில தமிழ் பிரபலங்களும் அடங்குவர். RCB வெற்றியை தொடர்ந்து, அவர்களின் கொண்டாட்டங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
அஷ்வத் மாரிமுத்து:
டிராகன் திரைப்படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, மிகப்பெறிய ஆர்சிபி ரசிகர். தனது படத்தில் கூட, “ஜெயிக்கலங்கிரத்துக்காக பிடிச்ச டீம்-அ மாத்திக்க முடியுமா?” என்ற டைலாக்கை வைத்திருப்பார். இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி பெற்றிருப்பதோடு, அவர் எக்ஸ் தளத்தில் அவர் போட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Blud @Dir_Ashwath created one scene
— KARTHIK DP (@dp_karthik) June 3, 2025
This year and #RCB won their finals!
அஜய் ஞானமுத்து:
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள், கோப்ரா உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவும் வெறித்தனமான பெங்களூரு அணியின் ரசிகர். அவர், நேரில் சென்று இப்போட்டியை கண்டுகளித்திருக்கிறார். 18 வருடங்கள் கழித்து இவர்கள் கப் வென்றதற்கு அவர் இணையத்தில் மிக நீண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார்.
அல்லு அர்ஜுன்:
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், மிகப்பெரிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகர் ஆவார். இவர், பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, தனது மகன் இதற்கு எவ்வாறு ரியாக்ட் செய்தார் என்பதையும் பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரிஷி சுனக்:
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், பெங்களூரு-பஞ்சாப் அணியின் போட்டியை நேரில் கண்டுகளித்திருக்கிறார். அவர், பெங்களூரு வெற்றி பெற்றவுடன், எழுந்து நின்று அதை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரசாந்த் நீல்:
கே.ஜி.எஃப், சலார் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல், பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாடிய வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
Neeell pic.twitter.com/fwpLzX4Rre
— (@tarakStan999) June 3, 2025
கோபிநாத்:
விராட் கோலி, வெற்றி பெற்ற பின், அவர் கண்கலங்கிய வீடியோவை நீயா நானா கோபிநாத் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். அதனுடன் கேப்ஷனில் ‘நீ சிங்கம்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.