ரெடின் கிங்ஸ்லி வீட்டில் வளைகாப்பு! முகத்தில் அவ்ளோ சந்தோஷம்-வைரலாகும் புகைப்படம்..

Redin Kingsley Sangeetha Baby Shower Photos : பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது  47 வயதில் தந்தையாகி இருக்கிறார். இதையடுத்து, அவரது வீட்டில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 28, 2025, 07:16 PM IST
  • 47 வயதில் அப்பாவான ரெடின் கிங்க்ஸ்லி
  • வீட்டில் நடந்த வளைகாப்பு!
  • வைரலாகும் போட்டோ..
ரெடின் கிங்ஸ்லி வீட்டில் வளைகாப்பு! முகத்தில் அவ்ளோ சந்தோஷம்-வைரலாகும் புகைப்படம்..

Redin Kingsley Sangeetha Baby Shower Photos : தமிழ் திரையுலகில் தற்போது, பிரபலமான காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர், தனது 40களில் திருமணம் செய்து கொண்ட இவர், 47வது வயதில் தந்தையாகி இருக்கிறார். இதையடுத்து, அவரது வீட்டில் நடந்த விஷேஷத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Add Zee News as a Preferred Source

ரெடின் கிங்ஸ்லி-சங்கீதா திருமணம்:

கோலிவுட்டின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர், ரெடின் கிங்ஸ்லி. இவர் பெரும்பாலும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில்தான் நடித்திருக்கிறார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இவர், திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன், சென்னைக்கு வந்துவிட்டார். டாக்டர், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்டவை இவர் நடித்ததில் சில ஹிட் படங்களாகும்.

ரெடின் கிங்ஸ்லி, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சீரியல் நடிகையும், சினிமா துணை நடிகையுமான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். மிக சிம்பிளாக நடந்த இவர்களின் திருமண விழாவில் வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். அதன் பின்னர் சில திரை பிரபலங்கள் இவரது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சங்கீதா, ஏற்கனவே திருமணமானவர். இவருக்கு ஒரு வளர்ந்த மகனும் இருக்கிறார். ஒரு நிகழ்வில் சந்தித்த இவர்கள் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட, அது நாளடைவில் காதலாக மாறி திருமணத்திலும் முடிந்தது. ஒரு நடிகர் 46 வயதில் திருமணம் செய்வது பெரிய விஷயம் என்றாலும், கிங்ஸ்லியின் திருமணம் குறித்து ஊரே பேசியது.

ஓராண்டுக்குள் நல்ல செய்தி!

ரெடின் கிங்ஸ்லி, விரைவில் தந்தையாக இருப்பதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தகவல்கள் பரவ ஆரம்பித்தது. அதை அவர்களே உண்மை என்றும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டனர். இந்த நிலையில், இவர்களின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், சில சின்னத்திரை மற்றும் பெரிய திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது, இந்த வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்களும், பிற பிரபலங்களும் விரைவில் தாய்-தந்தை ஆக இருக்கும் ரெடின் கிங்ஸிக்கும் சங்கீதாவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | மனைவிக்கு 2 தாலி கட்டிய ரெடின் கிங்ஸ்லி! காரணம் என்ன தெரியுமா?

மேலும் படிக்க | 47 வயதில் அப்பா ஆகும் பிரபல நடிகர்? திருமணமான 1 வருடத்தில் நல்ல செய்தி..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News