பாய்ஸ் படத்தில் ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கியவர்-ஆனா இப்போ நடிப்பதே இல்லை! யார் தெரியுமா?

Thaman Got High Salary Than Siddharth In Boys Movie : ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான படம், பாய்ஸ் இந்த படத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் ஒருவர் இப்போது நடிப்பதே இல்லை. அவர் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 3, 2025, 12:06 PM IST
  • பாய்ஸ் படத்தில் அதிக சம்பளம் வாங்கியவர்
  • அது அவரது முதல் படம்..
  • சித்தார்தை விட அதிக சம்பளமாம்..
பாய்ஸ் படத்தில் ஹீரோவை விட அதிக சம்பளம் வாங்கியவர்-ஆனா இப்போ நடிப்பதே இல்லை! யார் தெரியுமா?

Thaman Got High Salary Than Siddharth In Boys Movie : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், இயக்குநர் ஷங்கர். இவர் நடிப்பில் வெளியாகி தோல்வியடைந்த படங்களுள் ஒன்று, பாய்ஸ். இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தை விட அதிக சம்பளம் வாங்கிய ஒருவர், இப்போது நடிப்பதே இல்லை. அவர் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

பாய்ஸ் திரைப்படம்:

21 வருடங்களுக்கு முன்னர், தமிழ் நாட்டில் வெளியாகி பலரது கண்டனங்களுக்கு ஆளான படம் பாய்ஸ். சித்தார்த், நகுல், ஜெனிலியா, மணிகண்டன், செந்தில், விவேக், தமன், பரத் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் அப்போதைய இளைஞர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால் ஷங்கரின் இந்த பார்வை அன்றைய மக்களுக்கு பிடிக்காமல் போனது. ஆனால், அதன் பிறகு இப்போது இந்த படத்தை கொண்டாடும் கூட்டமும் இருக்கிறது.

இந்த படம், இதில் நடித்திருந்த சித்தார்த், ஜெனிலியா, பரத், நகுல், தமன் என அனைவருக்குமே முதல் படமாகும். இந்த படத்திற்கு பிறகு அனைவரது வாழ்க்கையுமே மாறியது. இப்போது பெரிய நடிகராக இருக்கும் சித்தார்த்திற்கு இந்த படத்தில் வழங்கப்பட்ட சம்பளமே குறைவுதானாம். அப்போது, இந்த படத்தில் அவரை விட அதிகமாக சம்பளம் வாங்கிய நடிகர் ஒருவர் இருக்கிறார். ஆனால், அவர் இப்போது படங்களில் நடிப்பதே இல்லை. அவர் யார் தெரியுமா?

யார் அவர்?

பிரபல இசையமைப்பாளர் தமன்தான், அந்த நடிகர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், பாய்ஸ் படத்தில் நடித்து கொண்டிருந்த போது சித்தார்த், “நான்தான் ஹீரோ” என்று பேசும் போதெல்லாம், “எனக்குதான் இந்த படத்தில் அதிக சம்பளம் கொடுத்துள்ளார்கள்” என்று கூறி கலாய்ப்பாராம். 

தமன் தமிழில் பாய்ஸ், சிந்தனை செய், அய்யனார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மிஸ்டர் மஜ்னு என்ற தெலுங்கு படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்த இவர், தான் இசையமைக்கும் சில ஆல்பம் பாடல்களில் மட்டும் தோன்றி வருகிறார்.

Thaman

தமன், திரையுலகிற்கு வந்த போது அவருக்கு பாய்ஸ் படத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு, பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் அப்படியே இசையுலகின் பக்கம் சென்று விட்டார். தமனின் தந்தை-தாய் இருவமே இசைக்கலைஞர்கள் எனப்து குறிப்பிடத்தக்கது.

இப்போது எல்லாரும் என்ன செய்கிறார்கள்?

தமன், இசையுலகில் கலக்கி வருகிறார். இவருக்கு டோலிவுட் கைக்கொடுக்க, தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சித்தார்த்தை கடைசியாக இந்தியன் 2 படத்தில் பார்த்தோம். இந்த படத்திற்கு பிறகு மிஸ் யூ படம் வெளியாகி தோல்வியை தழுவியது. பரத், அவ்வப்போது சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தோன்றி வருகிறார். மணிகண்டன் கடந்த ஆண்டு வெளியான மகாராஜா படத்தில் நடித்திருந்தார். ஜெனிலியா பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என அனைத்து திரையுலகிலும் ஒரு கலக்கு கலக்கி, இப்போது குடும்பம்-குழந்தைகள் என மும்பை பக்கம் செட்டிலாகி விட்டார்.

தோல்வி படங்களே தராத இயக்குநர் என்று பெயர் வாங்கிய ஷங்கரையே ஆட்டம் காண வைத்து விட்டது இந்தியன் 2. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர, கேம் சேஞ்சர் படத்தை எடுத்தார். ஆனால் இந்த படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால், கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டு அடுத்த படம் குறித்து யோசித்து வருகிறார் ஷங்கர்.

மேலும் படிக்க | ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய முன்னணி நடிகை! யார் தெரியுமா?

 

மேலும் படிக்க | ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்!! ஒரு படத்திற்கு இவ்வளவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News