6 வருடங்களாக நடிக்கவே இல்லை..42 வயது நடிகைக்கு 30 கோடி சம்பளம்! யார் தெரியுமா?

Highest Paid Actress In India : பிரபல நடிகை ஒருவர், 6 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும், இப்போது புதிதாக நடிக்கும் படம் ஒன்றிற்கு அதிக சம்பளம் வாங்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 24, 2025, 02:57 PM IST
  • அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை!
  • 6 வருடங்களாக படங்களில் நடிக்கவே இல்லை..
  • வயதும் 42 வயதாகிறது..
6 வருடங்களாக நடிக்கவே இல்லை..42 வயது நடிகைக்கு 30 கோடி சம்பளம்! யார் தெரியுமா?

Highest Paid Actress In India : இந்திய திரையுலகை பொறுத்தவரை, ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கும் டாப் ஸ்டார்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், நடிகைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதிலும், சில மாதங்கள் எந்த படங்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை, மார்கெட் சரிவில் சென்று கொண்டிருக்கிறது என்றால் அந்த சம்பளம் இன்னும் குறைக்கப்படும். அப்படியிருக்கையில், ஒரு நடிகை 6 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்கவே இல்லை என்றாலும், தற்போது நடிக்க இருக்கும் ஒரு திரைப்படத்திற்காக ரூ.30 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். அவர் யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

யார் அந்த நடிகை?

இந்த நடிகை, இந்திய படங்களில் நடித்தே கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆகிறது. இவர் முதன்முதலில் அறிமுகமானதே தமிழ் படம் ஒன்றின் மூலமாகத்தான். பாலிவுட்டில் பெரிய நடிகையாக திகழ்ந்த இவர், பல டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். ஆனால், இவர் டாப் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக பாலிவுட்டில் இருந்து பிரேக் எடுத்தார். பின்னர் ஹாலிவுட்டிற்கு சென்று, இப்போது கலக்கி வருகிறார். இவருக்கு இப்போது இந்திய சினிமாவில் மார்கெட் இல்லை என்றாலும், தற்போது 6 வருடங்கள் கழித்து நடிக்க இருக்கும் ஒரு தென்னிந்திய படத்திற்காக சுமார் ரூ.30 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நடிகை வேறு யாருமில்லை, பிரியங்கா சோப்ராதான். இவர் முதலில் அறிமுகமானது விஜய் நடித்திருந்த தமிழன் படம்தான். பாலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த இவர், நிக் ஜாேனஸை திருமணம் செய்து கொண்ட பிறகு வெளிநாட்டில் வசித்து வந்தார். தற்போது ஒரு புதிய படத்தில் நடிப்பதற்காக இந்தியா திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது.

Priyanka Chopra

எந்த படத்திற்காக?

பிரியங்கா சோப்ரா, தற்போது ராஜமௌலி நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தில் அவர் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடிக்கிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த படத்தை SSMB 29 என்று பலர் அழைத்து வருகின்றனர். இந்த படத்திற்காகத்தான் பிரியங்கா சோப்ரா 30 கோடி வரை சம்பளமாக பெறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கான லுக் டெஸ்ட் சமீபத்தில் நடைப்பெற்றது. பிற வேலைகளும் தற்போது முடிக்கிவிடப்பட்டுள்ளது.

அதிக சம்பளம் பெறும் நடிகை..

பிரியங்கா சோப்ரா SSMB 29திரைப்படத்திற்கா 30 கோடி சம்பளம் வாங்கியிருப்பதை அடுத்து, இவர்தான் இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி இருக்கிறார். இவரை பாேலவே டாப் ஸ்டாராக இருக்கும் தீபிகா படுகோன் கூட இந்த அளவிற்கு சம்பளம் வாங்குவதில்லை என கூறப்படுகிறது. அதே போல, இப்போது புதிதாக வளர்ந்து வரும் ராஷ்மிகா மந்தனாவும் கூட இவ்வளவு சம்பளம் வாங்குவதில்லை. இதனால், தீபிகா தற்போது புதிய அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

மேலும் படிக்க | ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய முன்னணி நடிகை! யார் தெரியுமா?

மேலும் படிக்க | 2025யில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்! குறிப்பாக இந்த நடிகைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News