)
Villain Actor Wants To Act With Ajith : சாதாரணமாகவே, தமிழ் திரை உலகிற்கு நடிக்கும் ஆசையுடன் வருபவர்கள், அஜித் அல்லது விஜய் போல பெரிய நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வருவார்கள். அப்படி இல்லையென்றால் குறைந்தது அவர்கள் படத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசையில் வருவார்கள். இங்கு ஒரு பிரபல பாலிவுட் நடிகரும் அதே ஆசையை கொண்டிருக்கிறார்.
விஜய்யுடன் நடித்த படம்!
கோலிவுட் திரை உலகின் டாப் நடிகராக இருப்பவர் விஜய். தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தார். இவரது சினிமா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்பு கம்-பேக் கொடுக்க காரணமாக இருந்த படம் துப்பாக்கி. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் வில்லனாக, வித்யூத் ஜாம்வால் நடித்திருந்தார்.
துப்பாக்கி திரைப்படத்தில் அவர், நக்சலைட் தீவிரவாதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில், அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் நடிகரான இவர், பல ஸ்டார் படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
வித்யூத் ஜாம்வால்:
வித்யூத், துப்பாக்கி திரைப்படத்தில் மட்டுமல்ல, அஞ்சான் திரைப்படத்திலும் சூர்யாவிற்கு நண்பராக நடித்திருக்கிறார். சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மதராஸி’ திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசிய விஷயம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித்துடன் நடிக்க ஆசை!
வித்யூத் ஜாம்வாலிடம், “முதலில் விஜய்யுடன் நடித்தீர்கள், இப்போ சிவகார்த்திகேயனுடனும் நடித்து விட்டீர்கள்..அடுத்து யாருடன் நடிக்க ஆசை?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த வித்யூத், “அடுத்து மை டியர் அஜித்சாருடன் நடிக்க ஆசை” என்று கூறியிருந்தார். மேலும், “பில்லா படத்தில் நடித்த போது, அவர்தான் என்னை சரியாக வழிநடத்தினார். அது மட்டுமன்றி அவர் ரொம்பவும் நல்ல மனிதர்..அதனால் அவருடன் ஒரு படத்தில் நடிக்க ஆசை” என்று கூறினார்.
இப்போது என்ன செய்கிறார் அஜித்?
நடிகர் அஜித்குமார், சினிமாவை தொழிலாக கொண்டிருந்தாலும், தனக்கு பிடித்த விஷயங்களை செய்வதில் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் எல்லாம் கார் ரேஸிங் பயிற்சியில் ஈடுபடும் அவர், இப்போதும் வெளிநாட்டில் நடைபெறும் ஒரு கார் பந்தையத்தில் பிசியாக இருக்கிறார். இவருக்கு சினிமாவை தாண்டி, மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது விருப்பம் உள்ளவர்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.
இந்த ஆண்டு, அஜித் நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இதில், GBU திரைப்படம், நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இவரே, அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சு வார்த்தைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ